அதிமுகவின் பொது செயலாளரும், தமிழகத்தின் முதலமைச்சருமான ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலம் சரியில்லாமல் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் 5.12.2016 அன்று மரணமடைந்தார். அவர் மறைவுக்கு பின் தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது.
மாற்றங்கள் என்று சொல்வதை விட குழப்பங்கள், கூத்துக்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தமிழக மக்களே குழப்பத்திற்கு உள்ளாகி விட்டனர்.
அதிமுகவை பொறுத்தவரை தற்போது ஓபிஎஸ்., இபிஎஸ்., தலைமையில் கட்சி செயல்பட்டு வருகிறது.
தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, அதில் பொது செயலாளராக சசிகலா அவர்களும், துணை பொது செயலாளராக தினகரனும் உள்ளார்.
கடந்த சில மாதங்களில் 18 எம்எல்ஏ க்கள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, தமிழகத்தில் 20 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
மேலும், வரும் ஏப்ரல், மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதால், அதிமுக -பாஜக கூட்டணி வைக்கப் படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ஓபிஎஸ்-ன் தம்பியை அதிமுகவில் இருந்து நீக்கியத்துக்கு பின்னால், ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு இடையே மோதல் உண்டாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து ஓரங்கட்டினால் தான் நல்லது என இபிஎஸ் நினைப்பதாகவும், அவருக்கு துணையாக பாஜக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்பு பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமியை விட நெருக்கமாக இருந்த ஓபிஎஸ் அவர்களை, தற்போது பாஜக கழட்டிவிட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை உணர்ந்தே ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களை மீண்டும் ஒன்று திரட்டி ஓபிஎஸ் அணிக்கு பலம் சேர்த்து வருகிறார்.
இதற்கிடையே ஒவ்வொரு கிராமமாக இருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் கொண்டுவர எடப்பாடி அவர்கள் காய் நகர்த்தி வருகிறார்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஓபிஎஸ் ஒருவேளை ஓரங்கட்டப்பட்டால், பாஜகவை எதிர்த்து மீண்டும் ஒரு தர்ம யுத்தம் தொடங்குவார் என்று அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Thanks for Your Comments