மெக்சிகோவின் புயெப்லா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவியேற்ற மார்தா எரிக்கா அலோன்சோ ((Martha Erika Alonso)), ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
அவர் சென்ற ஹெலிகாப்டர் புயெப்லா தலைநகரில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது.
அவரது கணவரும், செனட் உறுப்பினரு மான ரபேல் மொரேனோ ((Rafeal moreno)), உள்பட நான்கு பேர் உடன் பயணித்தனர்.
புறப்பட்ட சில நிமிடங்களில் தொடர்பை இழந்த ஹெலிகாப்டர், காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஐந்து பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதை உறுதி செய்துள்ள அந்நாட்டின் புதிய அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபஸ், ஆளுநர் மற்றும் செனட் அவை உறுப்பினரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் களைத் தெரிவித்துக் கொள்வதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Thanks for Your Comments