ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை யில் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்து
தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்ட ங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம், கும்பகோண த்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாய த்தை கண்டித்தும்,
ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத் தியும் மாணவர்கள் கண்டன கோஷங் களை எழுப்பினர்.
கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக,
சுமார் இரண்டா யிரத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை
மூடும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Thanks for Your Comments