ராஜஸ்தானில் பாஜகவின் அமைச்சர்கள் சிலர் தேர்தலில் தங்கள் தொகுதியை இழந்துள்ளனர்,
அதில் ஒடாரம் தேவசி என்ற பாஜக அமைச்சர் சுயேச்சை யிடம் தோல்வி அடைந்தார்.
சிரோஹி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சன்யம் லோதா 10,253 வாக்குகள் வித்தியாச த்தில் ஒடாரம் தேவசியைத் தோற்கடித்தார்.
தேவசிக்கு 71.019 வாக்குகள், சன்யம் லோதாவுக்கு 81,272 வாக்குகள் கிடைத்தன.
லோதா முன்பு காங்கிரஸில் தான் இருந்தார், பிறகு வெளியேறி சுயேச்சை யாக இந்தத் தொகுதியில் நிற்க முடிவெடுத்து சாதித்துள்ளார்.
இதற்கிடையே நீராதார அமைச்சர் ராம்பிரதாப், காங்கிரஸ் வேட்பாளர் விநோத் குமாரிடம் சுமார் 15,522 வாக்குகள் வித்தியாச த்தில் தோற்றார்.
வேளாண் அமைச்சர் பிரபுலால் சைனி 34,063 வாக்குகள் வித்தியாச த்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் பையாவிடம் வீழ்ந்தார்.
ராஜஸ்தான் சட்டப் பேரவை சபாநாயகர் கைலாஷ் மேக்வால் மட்டும் 74,542 வாக்குகள் வித்தியாச த்தில் வெற்றி பெற்றுள்ளார்.
Thanks for Your Comments