பெங்களூரு மாநகரை கலக்கி கொண்டுள்ள தமிழக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், சினிமாவையே விஞ்சி விடக்கூடிய
வகையிலான மற்றும் உயிருக்கே ஆபத்தான 'அன்டர் கவர் ஆபரேஷன்' ஒன்றை நடத்தி,
நீண்ட நாட்களாக போலீசாரின் கண்களில் மண்ணை தூவி வந்த கொள்ளை கும்பலை பிடித்துள்ளார்.
பெங்களூரு புறநகர் பகுதிகளில், லாரி டிரைவர் களை வழிமறித்து கொள்ளை யடிக்கும்
சம்பவங்கள், கடந்த சில மாதங்களாக வரிசையாக நடைபெற்று வந்தன.
இதன் உச்சகட்டமாக ஒரு லாரி டிரைவர் கொலையே செய்யப் பட்டார். அவர் பெயர் பாஸ்கர் (44).
கடந்த நவம்பர் மாதம் 3ம் தேதியன்று, சந்தாபுரா பகுதியில் இருந்து ஓசூர் ரோடு நோக்கி, பாஸ்கர் லாரியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது தலகட்டாபுரா 80 அடி ரோடு அருகே மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து தாக்கி கொலை செய்தது.
சரியாக அதற்கு 2 நாட்களுக்கு பிறகு மற்றொரு விபரீத சம்பவம் அரங்கேறியது.
கேஎஸ் லே அவுட் பகுதியில், மற்றொரு லாரி டிரைவரிடம் கொள்ளை யடிக்கப் பட்டது.
பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவங்களின் காரணமாக, உடனடியாக போலீசார் உஷார் படுத்தப் பட்டனர்.
முதற் கட்டமாக மேற்கண்ட 2 சம்பவங்களும் நடைபெற்ற பகுதிகளுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப் பட்டன. இதில், மர்ம நபர்களின் உருவம் பதிவாகி யிருந்தது.
ஆனால் அவர்களின் முகம் தெளிவாக தெரிய வில்லை. இதனால் என்ன செய்வது என்று போலீசார் யோசித்து கொண்டி ருந்தனர். அந்த நேரத்தில் தான்,
'அன்டர் கவர் ஆபரேஷன்' ஒன்றை நடத்தி, கொள்ளை யர்களை பிடிப்பது என்ற அதிரடியான முடிவை போலீசார் எடுத்தனர்.
இந்த 'அன்டர் கவர் ஆபரேஷன்' சினிமாக் களையே விஞ்சி விட்டது. இது வேற லெவல் ரகம்.
கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில், 2 லாரிகளை போலீசார் நிறுத்தி விட்டனர்.
அத்துடன் டிரைவர்கள் போல் மாறு வேடமிட்டு கொண்டு, லாரியில் அமர்ந்து கொண்டனர்.
அப்போது கொள்ளை யடிக்கும் நோக்கத்துடன் வரும் கும்பலை பிடிக்க வேண்டும் என்பதே போலீசாரின் திட்டம்.
போலீசார் கணித்தது பொய்யாக வில்லை. எதிர் பார்த்தது போலவே கொள்ளை கும்பலை சேர்ந்த மூன்று பேர் ஒரு லாரிக்கு வந்தனர்.
சற்றும் தாமதிக்காத போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, அதிரடியாக கைது செய்தனர்.
சையத் சல்மான் (21), முகமது முடாசீர் (எ) முட்டு (24) மற்றும் சையது தோஹித் (28) ஆகிய மூன்று பேர் தான்,
தற்போது போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ள கொள்ளையர்கள். இவர்கள் மூவரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் தான்.
இந்த அன்டர் கவர் ஆபரேஷன் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
''எஸ்ஐ சுப்ரமணி, போலீஸ் கான்ஸ்டபிள்கள் பிரதீப் மற்றும் மகேஷ் ஆகியோ ர்தான் லாரி டிரைவர்கள் போல் மாறு வேடமிட்டு சென்று கொள்ளை யர்களை கையும், களவுமாக பிடித்தவர்கள்.
இந்த அன்டர் கவர் ஆபரேஷன் ஒரே நாளில் வெற்றி யடைந்து விடவில்லை.
தினந்தோறும் இரவு நேரங்களில் நாங்கள் வேண்டு மென்றே லாரிகளை அங்கு கொண்டு சென்று நிறுத்துவோம்.
இதில், ஒரு நாளில் தான் கொள்ளையர்கள் சிக்கினர். உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடக்கூடிய அபாயம் கூட இந்த அன்டர் கவர் ஆபரேஷனில் நிலவி வந்தது.
ஆனால் போலீசார் மூவரும், அதனை எல்லாம் பொருட் படுத்தாமல், கொள்ளை யர்களை பிடித்துள்ளனர்.
எனினும் தங்களை தற்காத்து கொள்ள பெப்பர் ஸ்பிரே, ஆயுதங்களை போலீசார் பயன் படுத்தினர்'' என்றார்.
இந்த அன்டர் கவர் ஆபரேஷனு க்கு மூளையாக செயல் பட்டவர் அண்ணாமலை ஐபிஎஸ்.
இவர் பெங்களூரு மாநகர போலீசின் (தெற்கு) துணை கமிஷனர். ஏனுங்க... இவரு நம்ம கோயமுத்தூரு காரருங்கோ... ஆம்,
பெங்களூருவை ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் அண்ணாமலை ஐபிஎஸ் கோவையை சேர்ந்தவர்.
பெங்களூரு நகரை மட்டுமல்ல... ஒட்டு மொத்த கர்நாடக மாநிலத்தையே அண்ணாமலை ஐபிஎஸ் கலக்கி கொண்டி ருக்கிறார் என்பதே உண்மை.
இதற்கு முன்னதாக கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தின் எஸ்பி யாக அண்ணாமலை ஐபிஎஸ் பணியாற்றி வந்தார்.
இந்த சூழலில் சமீபத்தில் தான், பெங்களூரு மாநகர போலீசின் (தெற்கு) துணை கமிஷனராக அண்ணாமலை ஐபிஎஸ் நியமிக்கப் பட்டார்.
தமிழகத்தில் பெரும்பாலும் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற நடிகர் களுக்கு தான் ஃபேன்ஸ் கிளப் இருக்கும்.
ஆனால் தமிழரான அண்ணாமலை ஐபிஎஸ்-க்கு, ஃபேன்ஸ் கிளப் வைத்து கொண்டாடி கொண்டிருக் கின்றனர் கன்னடிகாஸ். ஆம், உண்மை தான்.
பெங்களூரு மாநகரில் அண்ணாமலை ஐபிஎஸ்-க்கு ஃபேன்ஸ் கிளப் உள்ளது.
அண்ணாமலை ஐபிஎஸ் ஃபேன்ஸ் கிளப் என்ற பெயரில் பேஸ்புக் பக்கமும் செயல்பட்டு வருகிறது.
மக்கள் அனைவரிட த்திலும் நட்புடன் பழக கூடியவர் என்பதால் தான், ஒரு சினிமா நடிகரை காட்டிலும்,
அதிகப் படியான ரசிகர் கூட்டம் அண்ணாமலை ஐபிஎஸ்-ஐ பின் தொடர்ந்து கொண்டிருக் கிறது.
கன்னட மக்கள் இவரை 'கர்நாடகா சிங்கம்' என அன்போடு அழைக்கின்றனர். பத்திரிக்கை களும் கூட அப்படித் தான் எழுதுகின்றன.
கோயமுத்தூரை சேர்ந்தவரான நடிகர் சூர்யா, சிங்கம் படத்தில் நேர்மையான, அன்பான போலீஸ் அதிகாரியாக நடித்தார்.
அதே கோயமுத்தூரை சேர்ந்த அண்ணாமலை ஐபிஎஸ், நிஜத்தில் அவ்வாறு வாழ்ந்து கொண்டிருக் கிறார்.
இவர் கோவையில் மிக பிரபலமாக உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில், பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (2007 பேட்ஜ்) படித்தவர் என்பது கூடுதல் தகவல்.
இப்படி கன்னட மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி கொண்டிருக்கும் அண்ணாமலை ஐபிஎஸ் தான் அன்டர் கவர் ஆபரேஷனுக்கு மூளையாக செயல் பட்டவர்.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலு க்கு சமீபத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது (அவரது பதவிக் காலத்தை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்திருப்பது தனிக்கதை).
அப்போது ''என் பணியை இளைஞர் களை நம்பி விட்டு செல்கிறேன்'' என அவர் உருக்கமான பேசினார். அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர் தான் அண்ணா மலை ஐபிஎஸ்.
Thanks for Your Comments