பிரான்சில், மஞ்சள் அங்கி போராட்டத்தின் போது வன்முறை வெடித்த நிலையில், போலீசாருடன் மோதல் மூண்டது.
அந்நாட்டில் எரிபொருள்கள் விலை உயர்வுக்கு எதிராக சில வாரங்களுக்கு முன் போராட்டங்கள் நடைபெற்றன.
அரசுக்கெதிராகவும், அதிபர் இமான் மேக்ரான் பதவி விலகவும் வலியுறுத்தி சனிக்கிழமைகள்தோறும் போராட்டங்கள் தொடர்கின்றன.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், எதிர்ப்பின் அடையாளமாக இருளில் ஒளிரும் மஞ்சள் நிற அங்கி அணிந்து கொள்கின்றனர்.
பாரிஸ் நகரில் நடந்த போராட்டத்தின் போது, போராட்டக் காரர்கள் கையில் கிடைத்த வற்றை போலீசார் மீது எறிந்தனர்.
சிலர் போலீசாரை தாக்க முயன்றனர். மோதல் காரணமாக, அங்கு பதற்றம் நிலவியது.
Thanks for Your Comments