வறட்சியின் கோரப்பிடியில் ஆஃப்கன் - விற்கப்படும் குழந்தைகள் !

0
40 ஆண்டு கால உள்நாட்டு மோதல்கள், தீவிரவாதத் தாக்குதல் களால் உருக்குலைந்த ஆஃப்கன் மக்கள், இப்போது வரலாறு காணாத வறட்சியால் உணவின்றித் தவிக்கிறார்கள். 
வறட்சியின் கோரப்பிடியில் ஆஃப்கன் - விற்கப்படும் குழந்தைகள் !
பசியின் கொடூரக் கரங்கள் அங்கே குழந்தை களைக் கூடச் சந்தையில் விற்க வைத்திருக் கின்றன. ஆறு வயது பெண் குழந்தை அவள். அவளின் தாய், தன் குழந்தையை இன்னொரு வரிடம் ஒப்படைக் கிறார். 

அழுது கொண்டே தாயைப் பிரிந்து செல்கிறது, அந்தக் குழந்தை. அவளின் தாயும் அழுது கொண்டே அவளை வழியனுப்பி வைக்கிறார். இனி, அழுது புரண்டாலும் தன் அம்மாவைப் பார்க்க முடியாது, 

தாம் இன்னொரு வருக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டோம் என்பது அந்தக் குழந்தை க்குத் தெரியாது. கடைசரக்கு போல விற்கப்பட்ட அந்தக் குழந்தை யின் பெயர் அஹிலா. 
அஹிலா வின் தாய் மமரீன், ஆஃப்கனின் ஹெரத் நகரத்துக்கு அருகே யுள்ள ஓர் அகதிகள் முகாமில் தஞ்ச மடைந்தவர். என் கணவர், தீவிரவாதி களின் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். 

உதவி கிடைக்கும் என்று நம்பி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வந்தேன். இங்கும் உதவி கிடைக்க வில்லை. குழந்தை களுக்கு உண வில்லை. 

வேறு வழியில்லாமல் குழந்தையை விற்று விட்டேன்” என்று மமரீன் அளித்த பேட்டி, அமெரிக்கத் தொலைக் காட்சி ஒன்றில் வெளியானது. மமரீனின் இந்த வார்த்தைகள், உலகையே உலுக்கி யிருக்கின் றன.
வறட்சியின் கோரப்பிடியில் ஆஃப்கன் - விற்கப்படும் குழந்தைகள் !
நிஜாமுதீன் என்பவர்தான், தனது பத்து வயது மகனுக்காக அஹிலாவை 3,000 டாலருக்கு வாங்கியுள்ளார். குழந்தையை விற்பனை செய்தது மூலம் மமரீனுக்குக் கிடைத் திருப்பது முன்பணமாக 96 டாலர் மட்டுமே. 

மீதித்தொகை கிடைக்க இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளாகலாம். கணவனையும், வாழ் விடத்தையும் இழந்து தவிக்கும் மமரீனுக்கு வேறு வழி தெரியவில்லை.

அஹிலா மட்டுமல்ல... ஆஃப்கனில் பல குழந்தைகள் விற்பனைப் பொருள்க ளாகி விட்டனர். 

வாங்கியக் கடனை அடைக்கவும், வறுமையிலிருந்து மீளவும் வேறு வழியே இல்லாமல் தங்கள் குழந்தை களை விற்கத் துணிந்து விட்டனர், 
ஆஃப்கன் மக்கள். தீவிரவாத த்துடன் சேர்ந்து வறட்சியும் அவர்களை வேட்டையாடி வருகிறது. 

ஹெல்மான்ட் ஆற்றின் கரையோரம் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் பலர், காபூல் உள்ளிட்ட நகரங்களில் பிச்சை யெடுக்கிறார்கள். 

ஈரானை நோக்கி ஓடும் ஹெல்மான்ட் ஆற்றில் கரை புரண்டு ஓடும் நீரில் நாங்கள் குளிக்கலாம். ஆனால், எங்களின் விவசாய நிலங் களுக்கு அந்த நீரைப் பயன்படுத்த முடியாது” என்கின்றனர், விவசாயிகள். 

இயற்கைச் சீற்றத்தை விட, அண்டை நாடுகளின் சுயநலம் தான் இவர்களை அதிகமாகப் பாதித்துள்ளது. 
ஆஃப்கனின் இருபது பில்லியன் மதிப்பிலான பொருளாதாரம், விவசாய உற்பத்தி மூலம் தான் கிடைக்கிறது. 

கடந்த 1973-ம் ஆண்டில் ஈரான்-ஆஃப்கன் இடையே ‘ஹெல்மான்ட் நதிநீர் பங்கீடு’ ஒப்பந்தம் கையெழுத் தானது. அதன்படி ஆஃப்கன், 820 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை ஈரானுக்கு வழங்க வேண்டும். 

இந்த ஆற்றின் குறுக்கே எந்த ஓர் அணை, நீர்ப் பாசனத் திட்டங் களையும் மேற்கொள்ளக் கூடாது. ஹெல்மான்ட் ஆறு வறண்டால், ஆஃப்கனை விட, ஈரான் அதிகம் பாதிக்கும். 

அதனால், மேற்கு ஹெராத் மாகாணத்தில் ஹெல்மான்ட் ஆற்றின் குறுக்கே ஆஃப்கனுக்காக இந்தியா கட்டிய ஸல்மா அணைக் கட்டுத் திட்டத்தை ஈரான் கடுமையாக எதிர்த்தது.
தனது நாட்டில் உற்பத்தி ஆகும் மூன்றில் ஒரு பங்கு நீரைத் தான் ஆஃப்கனால் பயன்படுத்த முடிகிறது. இரண்டு பங்கு நீரை அண்டை நாடுகளான ஈரானும், பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்கின்றன. 

கடந்த ஆண்டு மட்டும் மூன்று பில்லியன் கன மீட்டர் நீர், ஈரானுக்குக் கிடைத்தது, என நீர்ப்பாசன அதிகாரிகள் கணக் கிட்டாலும், ஆஃப்கனால் இதை நிரூபிக்க முடிய வில்லை. 

ஏனெனில், ஈரானுக்குச் செல்லும் நீரின் அளவைக் கணக்கிடும் நிலையம் இருக்கும் கஜகி அணைக்கட்டு, தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு க்குப் பிறகு அரசு அலுவலர்கள் ஒருவர் கூட அங்குச் செல்ல முடிய வில்லை. 

ஆஃப்கனின் பாசனத் திட்டங்களைத் தடுப்பதற்காகத் தான், தாலிபன்களை ஈரான் ஆதரிக்கிறது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், ஈரான் இதை மறுத்து வருகிறது. 
இதனால், ஆஃப்கனில் உள்ள 34 மாகாணங்களில் 20 மாகாணங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி உள்ளன. வாழ்வாதாரத் துக்காக அருகே யுள்ள நகரங்களுக்குப் பலர் இடம் பெயர்ந்தனர். 

அங்கே ஆறு வயது முதல் 14 வயதுக் குழந்தைகள் கூடச் செங்கல் சூளைகள், இரும்புப் பட்டறைகள், தெருவோரக் கடைகளில் வேலை செய்கின்றனர்.
வல்லரசுகள் தங்களின் அதிகார த்தை நிலை நாட்ட, 1980 -களில் தூண்டி விடப்பட்ட உள்நாட்டுப் போர், இன்றளவும் ஆஃப்கனைச் சீரழித்து வருகிறது. 

அண்டை நாடுகளின் சுய நலத்துக்கும் இயற்கை வளங்களை அபகரி க்கும் பேராசை க்கும் அப்பாவி மக்கள் தான் பலியாகி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings