குதிரைப் படை, யானைப் படை, கப்பல் படை என்று பழைய காலத்தில் படைகள் இருந்தன.
வில், அம்பு, வாள் போன்ற போர்க் கருவிகளைப் பயன்படுத்தி நேருக்கு நேர் சண்டை யிட்டனர்.
ஆனால் இப்போது தொலை தூரத்தில் இருந்து குண்டு மழை பொழி கின்றனர்.
அணு குண்டுகளை தயாரித்து வைத்துக் கொண்டு அவற்றை வீசப் போவதாகப் பயமுறுத்து கின்றனர்.
தொலை தூரத்தில் உள்ள எதிரி படைகளைக் கண்டறிய பல கருவிகள் இப்போது உள்ளன.
ரேடார் எனும் தொலை நிலை இயக்க அறி கருவியும் அவற்றில் ஒன்று.
இந்தக் கருவியின் மூலம் வெகு தொலை வில் உள்ள பொருள் களை, மனிதர் களைத் தெரிந்து கொள்ள முடியும்.
ரேடார் நுண் அலைகளைப் பயன்படுத்தி வாகனங்கள், விமானங்கள் ஆகிய வற்றின் இருப்பிடம்,
அவை செல்லும் திசை, வேகம் ஆகிய வற்றைக் கண்டு பிடிக்க முடியும்.
இந்த ரேடார் மூலம் நுண்ணலை களை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அனுப்பு வார்கள்.
அந்த இலக்கின் மீது அவை படும்போது அவற்றி லிருந்து வெளிவரும் சமிக்ஞை களை வைத்து
அந்த இலக்கைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக போர் விமானங்கள், கப்பல்களை அறிய இது பயன்படு கிறது.
இந்த ரேடார் கருவியின் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக ஐஐடி - கான்பூரைச் சேர்ந்த
ஆராய்ச்சி யாளர்கள் ஒரு புதுவிதமான " மெட்டா மெட்டிரியல்ஸ்' - ஐக் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த மெட்டா மெட்டிரியல்ஸ் செயற்கை யாக உருவாக் கப்படக் கூடியது.
பல விதமான மூலகங் களை ஒன்றிணைத்து நமது தேவைக் கேற்ப தயாரிக் கப்படக் கூடியது.
ஐஐடி - கான்பூர் ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்துள்ள இன்ஃப்ரா ரெட் மெட்டா மெட்டிரியல்ஸ் மிகவும் எடை குறைவானது;
வளைந்து கொடுக்கும் தன்மை உடையது; எந்தப் பொருளின் மீதும் இதை இணைத்து விடலாம்.
துணிகளில் இந்த மெட்டா மெட்டிரியல்சைப் பூசிக் கொள்ளலாம். கண்ணாடி களில் பூசலாம். வாகனங்க ளின் மேல் பகுதியில் பூசலாம்.
இந்த மெட்டா மெட்டிரியல்ஸ் பூசப்பட்ட துணிகளால் தைக்கப் பட்ட சீருடை களை அணிந்து கொண்டு
ஒரு படைவீரர் சென்றால், எதிரி நாட்டின் எந்த ரேடார் கருவியி லும் அவர் தென்பட மாட்டார்.
இந்த மெட்டா மெட்டிரியல்ஸ் பூசப்பட்ட வாகனங் களையும் எந்த ரேடார் கருவியும் கண்டு பிடிக்க முடியாது.
மிகச்சிறிய இந்த இன்ஃப்ரா ரெட் மெட்டா மெட்டிரியல்ûஸ ஒரு பொருளின் மீது பூசினால்,
அந்தப் பொருளில் இருந்து வெளி வரும் கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணலை களின் அளவு குறைந்து விடுகிறது.
அல்லது நுண்ண லைகள் தடுக்கப் படுகின்றன. இதனால் அந்தப் பொருளை ரேடார் கருவியால் கண்டு பிடிக்க முடியாமல் போய் விடுகிறது.
இந்த இன்ஃப்ரா ரெட் மெட்டா மெட்டிரியல்சை வாகனங் களைப் போர்த்தும் துணிகளில்
இணைத் தால், அந்த வாகனத்தை ரேடார் கருவியால் கண்டு பிடிக்க முடியாது.
"2010 ஆண்டி லிருந்து இந்த கண்டு பிடிப்பு தொடர்பான பணிகளில் நாங்கள் ஈடுபட்டி ருந்தாலும்,
இப்போது தான் இந்த மெட்டா மெட்டிரியல்சை பெரும் அளவில் உற்பத்தி செய்யும் திறனை நாம் பெற்றிருக் கிறோம்.
இதன் மூலம் மிகப் பெரிய பரப்பளவி லும் இந்த மெட்டா மெட்டிரியல்சைப் பயன்படுத்த முடியும்'' என்கிறார்
ஐஐடி - கான்பூரில் இயற்பியல் துறைப் பேராசிரி யராகப் பணிபுரியும் எஸ்.அனந்தராம கிருஷ்ணன்.
இந்த மெட்டா மெட்டிரியல்சை ஹெலிகாப்டர், விமானங்கள் ஆகிய வற்றிலும் பயன் படுத்த முடியும்.
பிற நாட்டு ரேடார்க ளால் அவற்றைக் கண்டு பிடிக்க முடியாது என்பதே அதன் முக்கியத் துவத்தை எடுத்துக் காட்டும்.
மத்திய அரசின் "பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன த்தின் ஆதரவுடன் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
ந.ஜீவா
Thanks for Your Comments