விபத்தில் சிக்கிய போலீஸ் வாகனம் - முருகன் உறவினர்கள் கலக்கம் !

0
அருப்புக் கோட்டை யில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக சிறையில் உள்ள 


முருகன், கருப்பசாமி ஆகியோர் நீதி மன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது

அவர்களது போலீஸ் வாகனம் மீது வேறு ஒரு வாகனம் லேசாக உரசி விபத்தை ஏற்படுத்தியது.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. 

இவர் தன்னிடம் பயிலும் மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரி களுடன் தவறான விஷயத்தை செய்யுமாறு கூறினார்.

கைது

இதற்கு மறுத்த மாணவிகளின் புகாரின் பேரில் நிர்மலா தேவி கைது செய்யப் பட்டார். 

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும்


ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தான் மாணவிகளை தங்கள் ஆசைக்கு இணங்க 

வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக நிர்மலா தேவி வாக்கு மூலம் அளித்ததை தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப் பட்டனர்.

இருவரு க்கும் ஆபத்து

இந்த நிலையில் தங்கள் உயிருக்கு சிறையில் ஆபத்து இருப்பதாக மூவருமே அவர்களது வழக்கறி ஞர்கள் மூலம் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை க்கு ஆஜர் படுத்துவதற் காக 

மதுரை சிறையி லிருந்து நிர்மலா தேவி ஒரு வாகனத்தி லும் முருகன், கருப்பசாமி ஒரு வாகனத்திலும் அழைத்து வரப்பட்டனர்.

பரபரப்பு

நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு அவர்கள் திரும்பி சென்று கொண்டி ருந்தனர்


அப்போது கிருஷ்ணன் கோயில் அருகே எதிரே வந்த மினி டெம்போ வாகனம் 
லேசாக போலீஸ் வாகனத்தின் பக்க வாட்டில் உரசி விபத்தை ஏற்படுத் தியது. 

இதை யடுத்து மினி டெம்போ வாகன ஓட்டுநரிடம் போலீஸார் தகராறு செய்தனர். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.

விபத்து

இது குறித்து முருகன் உறவினர்கள் கூறுகை யில் சிறையில் தங்களது உயிருக்கு ஆபத்து என்று முருகன் கூறினார். 

ஆனால் இந்த விபத்தை பார்க்கும் போது தான் அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரிய வந்தது.


விபத்து எதேச்சை யாக நடந்தது போல் தெரிய வில்லை. முருகனு க்கு ஜாமீன் கிடைத்து விட்டால் 

அனைத்தை யும் பத்திரிகை யாளர்கள் முன்பு கூறி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக 

ஜாமீன் கிடைக்கக் கூடாது என்பதற் காகவே இது போல் விபத்து ஏற்படுத்தப் பட்டதாக தெரிகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings