சென்னையில் வாகன ஓட்டிகளின் சபல புத்தியைப் பயன்படுத்தி கத்தி முனையில்
வழிப்பறி செய்துவந்த இரண்டு தம்பதிகளை போலீஸார் கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.
கும்மிடிப் பூண்டியை அடுத்த பொந்த பாக்கத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். பெயிண்ட் வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று தனது நண்பர் ஒருவரைச் சந்திக்க சென்னைக்கு காரில் வந்து கொண்டி ருந்தார்.
நள்ளிரவில் கார் போரூர் நோக்கி வந்த போது வழியில் பாடி பாலத்தின் ஓரத்தில் ஒரு இளம் பெண் உதவி கேட்பது போல் காரை மடக்கி யுள்ளார்.
அதைப் பார்த்து விஸ்வநாதன் (40) காரை நிறுத்தி யுள்ளார். பக்கத்து ஊருக்கு வந்தவர் பேருந்தை தவற விட்டு விட்டதாகவும்
உதவிக்கு ஆள் இல்லாததால் நடு சாலையில் நிற்பதாகவும், தன்னைப் போகும் வழியில் இறக்கி விட்டால் போதும் என்றும் கூறி யுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய விஸ்வநாதன் அவரைக் காரில் ஏற்றி யுள்ளார். அப்போது இன்னொரு பெண் திடீரென வந்துள்ளார்.
''இவர் யார்'' என விஸ்வநாதன் கேட்க, ''அது எனது தோழி'' என்று அப்பெண் கூறியுள்ளார்.
''முதலில் தனியாக வந்தேன் என்று சொன்னாயே'' என விஸ்வநாதன் கேட்க, ''தனியாக வரவில்லை
இன்னும் இரண்டு பேரும் இருக்கிறார்கள்'' என்று அந்த இளம் பெண் கூறியுள்ளார்.
விஸ்வநாதன் சுதாரிப்பதற்குள் இரண்டு ஆண்கள் விஸ்வநாதன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி
அவரிடமிருந்த செயின் மற்றும் பிரேஸ்லெட், செல்போன், ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
நகை, பணத்தைப் பறிகொடுத்த விஸ்வநாதன் அப்பகுதியி லிருந்த போக்கு வரத்து
போலீஸாரிடம் கூற, அவர்கள் உடனடியாக வந்து தேடிப் பார்க்க யாரும் சிக்கவில்லை.
விஸ்வநாதன் வழிப்பறி குறித்து வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதை யடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் விஸ்வநாதன் கூறிய அடையாளத்தை வைத்து இது போன்ற வழிப்பறி யில் ஈடுபடும் ராஜ மங்கலத்தைச் சேர்ந்த சுகுமார் (25),
அவரின் மனைவி வரலட்சுமி (23), வால்டாக்ஸ் கொண்டித் தோப்பு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (28),
அவரின் மனைவி ரேவதி (24) ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணை யில் விஸ்வ நாதனிடம் வழிப்பறி செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் சபலத்தைப் பயன்படுத்தி பெண்களைத் தனியாக
சாலையில் நிறுத்தி உதவி கேட்பது போல் அவர்களிடம் வழிப்பறி செய்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களிட மிருந்து விஸ்வ நாதனிடம் வழிப்பறி செய்த நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதை யடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
Thanks for Your Comments