ஆளைப் பிடிப்பாங்க ஜெயந்தி - பணம் பறிப்பார் போலீஸ் ஏட்டு !

0
பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் சேர்ந்து, பலரிடம் பணம் பறித்த போலீஸ் 


ஏட்டு மீது சென்னை கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

அவரை சஸ்பெண்டு செய்து கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தர விட்டுள்ளார்.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குப் பேசிய பெண் ஒருவர், அமைந்தகரை என்.எஸ்.கே நகர் 

2-வது தெருவில் வழிப்பறி திருடனைப் பிடித்து வைத்திருப்ப தாக பதற்றமாகக் கூறினார். 

உடனடியாக அமைந்தகரை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று திருடனைப் பிடித்தனர். 

அவரைப் பிடித்து வைத்த பெண்ணிடம், என்ன நடந்தது என்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பான தகவல்கள் வெளி வந்தன.

விசாரணையில், பிடிபட்ட நபர் திருடனே இல்லை என்பது தெரிந்ததும் போலீஸார் அதிர்ச்சி யடைந்தனர். 

அவர், சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவர் விஸ்வநாதன் என்றும், அந்தப் பெண்ணின் பெயர் ஜெயந்தி என்றும் தெரிய வந்தது. 


பாலியல் தொழில் விவகாரத்தில் விஸ்வ நாதனுக்கும் ஜெயந்திக்கும் தகராறு ஏற்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

அதன்பிறகு நடந்த சம்பவத்தை நம்மிடம் விவரித்தார் போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``ஜெயந்தி, பாலியல் தொழில் புரோக்கர். 

சம்பவத்தன்று, விஸ்வநாத னும் ஜெயந்தியும் ஆட்டோவில் அமைந்தகரை என்.எஸ்.கே நகர் 2-வது தெருவில் உள்ள வீட்டுக்கு வந்தனர். 

அப்போது போலீஸ் சீருடையில் வந்த ஒருவர், திடீரென ஆட்டோவை மடக்கினார். 

பிறகு, அந்த நபர் விஸ்வ நாதனை மிரட்டி 900 ரூபாயை பிடுங்கிச் சென்றார். அதன் பிறகு தான் விஸ்வநாத னுக்கும் ஜெயந்திக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திர மடைந்த ஜெயந்தி, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு திருடனைப் பிடித்து வைத்திருப்ப தாகத் தவறான தகவலைத் தெரிவித் துள்ளார்.

போலீஸ் சீருடையில் வந்த நபர் யாரென்று ஜெயந்தி யிடம் கேட்டதற்கு, அவர் தெரியாது என்று பதிலளித்தார். 

இதனால், நாங்கள் நடத்திய விசாரணையில் விஸ்வநாத னிடம் பணம் பறித்தவர் 

கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் ஏட்டாகப் பணி புரிந்து வருவதும் தெரிய வந்தது. 


அவருக்கும் ஜெயந்திக்கும், பழக்கம் இருப்பதும் தெரிந்தது. ஜெயந்தி யின் ஆசை வார்த்தையில் மயங்கி, 

அவருடன் வருபவர் களிடம் போலீஸ் சீருடையில் வந்து ஏட்டு பணம் பறிப்பதை வாடிக்கை யாக வைத்துள்ளார். 

இது தொடர்பாக நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தனர். 

இதை யடுத்து, டிரைவர் விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் பாலியல் தொழில் செய்து வந்த 

பெண்ணுடன் சேர்ந்து வழிப்பறி யில் ஈடுபட்ட தாக ஏட்டு மற்றும் ஜெயந்தி மீது 323 - (காயம் ஏற்படுத்துதல்), 384- (வழிப்பறி), 506(1)- (கொலை மிரட்டல்), 

8 பி (விபசாரம் செய்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளோம், ஜெயந்தியைக் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 

புழல் மத்திய சிறையில் அடைத் துள்ளோம். இந்த வழக்கில் போலீஸ் ஏட்டு தலை மறைவாகி விட்டார். அவரைத் தேடி வருகிறோம்" என்றார்.

`ஜெயந்தியின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்த போது தான், போலீஸ் ஏட்டுவின் நம்பருக்கு அவர் பலதடவை பேசியிருப்பது தெரிய வந்தது. 

இதனா,ல் ஏட்டு குறித்து ரகசியமாக போலீஸார் விசாரித்தனர். அப்போது, ஆசை வார்த்தை கூறி, சிலரை ஆட்டோவில் அழைத்துச் செல்வார் ஜெயந்தி. 

அப்போது, அந்தத் தகவலை ஏட்டுக்கு எஸ்.எம்.எஸ் அல்லது போனில் தெரிவிப்பார். 


உடனடியாக சம்பவ இடத்துக்குச் செல்லும் ஏட்டு, கையும் களவுமாக ஜெயந்தி யையும் அவருடன் சென்ற நபரையும் பிடிப்பார். 

வழக்கு பதிவு செய்து விடுவதாக மிரட்டுவார். அதன் பிறகு பேரம் பேசி பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்று விடுவார். 

ஜெயந்தி யிடமும் ஏட்டிடமும் சிக்கிய பணம், பொருள்கள், தங்க நகைகளை ஏமாந்தவர் களின் பட்டியல் நீள்கின்றன. 

இவர்களின் கூட்டணி காக்கிகள் மத்தியில் தெரிந்தாலும், யாரும் தைரியமாக உயரதிகாரி களுக்குத் தகவல் தெரிவிக்க வில்லை. 

'தவளை தன் வாயால் கெடுவதைப் போல' ஜெயந்தி கொடுத்த தகவலால் ஏட்டு வசமாக சிக்கி விட்டார்" என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.


'வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல' நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸ் ஏட்டு, ஜெயந்தி யுடன் சேர்ந்து 

பணத்தை மிரட்டிப் பறிக்கும் சம்பவம், காக்கிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

இந்தச் சூழ்நிலையில், தலைமைக் காவலரை சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வ நாதன் உத்தர விட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings