நேற்று மாலையில் கோயிலுக்கு வந்த நல்லசாமி கோயிலில் சாமிக்கு உடைத்த சிதறு தேங்காயை பொறுக்க முற்பட்டார்,
ஆனால் ஏற்கனவே அங்கிருந்த வடிவேலும், கந்தசாமியும் தேங்காயை பொறுக்க வேண்டாம் என தடுத்ததாக தெரிகிறது.
கீழே கிடந்த கட்டையால் அவர்களை தாக்கிவிட்டு ஓடி வட்டார்.
பிறகு ஆத்தாம் பாளையத்திற்கு சென்ற சேர்ந்த நல்லசாமி அதே ஊரில் வசிக்கும் குமார்
என்பவரிடம் 200 ரூபாய் கேட்டு தகராறு செய்ததுடன், தன் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு ஓடிவிட்டார்.
அப்போது பொது மக்கள் அவரை சேர்ந்து பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத் தனர்.
பின் போலிஸாரிடம் அவர் கூறியதவது:
நான் தேங்காய் பொறுக்கும் போது கோயிலில் இருந்த இருவரும் என்னை தடுத்தனர்,
அதனால் ஆத்திரத்தால் அவர்களை அருகில் இருந்த கட்டையால் அடித்தே இருவரையும் கொன்று விட்டேன்.
அதனால் ஊரிலிருந்தால் போலீஸ் பிடித்து விடுவார்கள் என்பதால் என் ஆத்தாம் பாளையத்தி லிருந்து கிளம்பி செல்வபதற்கு தயாரானேன்.
ஆனால் கையில் காசு இல்லாததால் குமார் என்பவரிடம் 200 ரூபாய் பணம் கேட்டேன் .
ஆனால் அவர் தர மறுக்கவே கையில் இருந்த கத்தியால் அவரை குத்தி விட்டு ஓடினேன். ஆனால் மக்கள் பிடித்து விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Thanks for Your Comments