அண்டை வீட்டில் இருந்து தொடர்ந்து கேட்ட சத்தம் தனக்கு தொல்லை யாக இருப்பதால், தம்பதியினர் மீது பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் ஒரு லட்சம் பவுண்ட் அபராதம் செலுத்தும்படி உத்தரவிடப் பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் Sarvenaz Fouladi(39). இவரது அண்டை வீட்டில் வசிக்கும் Sarah, Ahmed El Kerrami தம்பதியினர் மற்றும்
அவர்களின் குழந்தைகள் தொடர்ந்து சத்தம் போடுவது மிகுந்த தொல்லையாக இருப்பதாக Fouladi குற்றஞ் சாட்டினார்.
மேலும், Kerrami-யின் குடும்பத்தினர் எழுப்பும் சத்தம் சகித்துக் கொள்ள முடியாத வகையில் இருப்பதாகவும்,
அவரது குழந்தைகள் பிளாட்டை ஒரு விளையாட்டு மைதானம் போல உபயோகிப்பதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த குற்றச்சாட்டின் மீதான வழக்கு விசாரணையில், குறித்த தம்பதியினர் கடந்த 2010ஆம் ஆண்டு மரத்தால் இந்த பிளாட்டை நிறுவியுள்ளதாக தெரிய வந்தது.
இதனால் தான் இரைச்சல் அதிகமாக உள்ளது என Fouladi தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் சுமார் 1,07,397 பவுண்டுகளை Fouladi-க்கு அபராதமாக வழங்க வேண்டும் என்றும்,
இரைச்சல் ஏற்படாதவாறு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, Sarah-Kerrami தம்பதி இதுதொடர்பாக மேல்முறையீடு செய்தது.
அப்போது Fouladi-யும், அவரது தாயும் மிகைப் படுத்தப்பட்ட குற்றச் சாட்டை முன் வைத்ததை நீதிமன்றம் கண்டுபிடித்தது.
அதனைத் தொடர்ந்து, Kerrami தங்கள் மீது சுமத்தப் பட்டதற்கு வலுவான ஆதாரம் இல்லை எனக் கூறி வாதம் செய்தது.
ஆனால், கீழ்நீதிமன்றத்தில் இரைச்சல் தொல்லைக்கான ஏராளமான ஆதாரங்கள் வழங்கப் பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், 2010ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த தரை தளம், இரைச்சலை தடுக்கும் வகையில் வடிவமைக்கப் படவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
எனவே, குறித்த தம்பதியர் அபராத பணத்தை செலுத்த வேண்டும் என்றும், இந்த பிரச்சனையை சரிசெய்யும் வரை ஒரு நாளைக்கு 40 பவுண்ட் என்ற அளவில் கட்டணம் உயரும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Thanks for Your Comments