முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனமாற்றம் - யார் காரணம்?

0
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க. வில் சேர்ந்ததற்கு மணி பெயரைக் 
கொண்ட அமைச்சர் ஒருவர்தான் காரணம் என்ற தகவல் வெளியாகி யுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலை யில் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும் 

டி.டி.வி. தினகரனின் கஜானா வாகக் கருதப்பட்ட செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைந்தார். 

இதனால், அண்ணா அறிவாலாயம் நேற்று விழாக்கோலம் பூண்டது. அவர் எதற்காக தி.மு.க.வில் சேர்ந்தார் 


என்று கொங்கு மண்டல அ.தி.மு.க. வின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, 

``குறுகிய காலத்தில் அ.தி.மு.க.வில் வளர்ச்சி யடைந்தவர் களில் ஒருவர் செந்தில் பாலாஜி. 

போயஸ் கார்டனில் உள்ளவர் களின் நட்பு அவருக்குக் கிடைத்த பிறகு அவரின் வளர்ச்சி ஜெட் வேக மெடுத்தது. 

அசைக்க முடியாதவராக இருந்தார். அவர், தி.மு.க.வில் இணைந் திருப்பது 

கொங்கு மண்டல அ.தி.மு.க. வில் கடும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந் தால் இது நடந்திருக்குமா என்று அடிமட்ட தொண்டர்கள் புலம்புவதை பார்க்க முடிகிறது. 

அவர், தி.மு.க.வில் சேர்ந்ததை விட தேசியக் கட்சிகளில் சேர்ந்திருக் கலாம் என்ற கருத்து தொண்டர்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது.

செந்தில் பாலாஜி குறித்து ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அப்போது அவர் அமைச்சராக இருந்தார். 

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மணியின் பெயரைக் கொண்ட ஒருவரும் அமைச்சராக இருந்தார். 

மணியின் பெயரைக் கொண்ட அமைச்சர், தன்னுடைய இல்ல திருமண விழாவின் அழைப்பிதழ் கொடுக்க செந்தில் பாலாஜியைச் சந்தித்தார். 

அப்போது இரண்டு மணி நேரம் மணி அமைச்சர் காத்திருந் துள்ளார். 

சீனியரான அவர், தனக்கு நேர்ந்த அனுபவத்தை சக அமைச்சர் களிடம் கூறினார். 
ஆனால், அவரின் அப்போதைய செல்வாக்கு காரணமாக அவரை அப்போது யாரும் எதிர்த்து குரல் கொடுக்க முடிய வில்லை. 

அவரை எதிர்த்து யாரும் அரசியல் பண்ணமுடிய வில்லை.

சசிகலாவின் உறவினர் இளவரசி குடும்பத்தி னருடன் நெருக்கத்தி லிருந்த 

செந்தில் பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சராகி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். 

ஆனால் அவரின் கனவு நிறைவேற வில்லை. சசிகலா குடும்பத் தினரை அ.தி.மு.க. விலிருந்து ஓரங்கட்ட ஓ.பன்னீர் செல்வமும், 

எடப்பாடி பழனி சாமியும் முடிவு செய்த போது அதை எதிர்த்த வர்களில் ஒருவர் செந்தில் பாலாஜி. 


அதன் விளைவு, எம்.எல்.ஏ.பதவியும் பறிபோனது. இடைத் தேர்தலைச் சந்தித்து 

வெற்றி பெறுவேன் என்று தைரியமாக டி.டி.வி. தினகரனிடம் கூறியவர் அவர்தான்.

கொங்கு மண்டலத்தில் அவரின் வளர்ச்சியைப் பிடிக்காத வர்கள் அவருக்கு செக் வைக்க எம்.ஆர். விஜய பாஸ்கரை களமிறக்கினர். 

அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப் பட்டது. இவ்வாறு செந்தில் பாலாஜிக்கு 

எதிரான கோஷ்டி அரசியலால் அவரின் அரசியல் பயணம் இறங்கு முகமாகவே இருந்தது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றபிறகு டி.டி.வி. தினகரனுடன் இணைந்து 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வளர்ச்சிக் காக உழைத்தவர் களில் ஒருவர் செந்தில் பாலாஜி. 

இந்தச் சமயத்தில்தான் டி.டி.வி.  தினகரனு க்கும் அவருக்கும் சில விஷயங் களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

மனக்கசப்பு காரணமாக டி.டி.வி. தினகரனிட மிருந்து ஒதுங்கத் தொடங்கினார். 

ஏற்கெனவே மாவட்ட த்தில் அ.தி.மு.க. வினரின் எதிர்ப்பு களைச் சம்பாதித்த அவரால் அரசியல் ரீதியாக தாக்குப் பிடிக்க முடிய வில்லை. 

இதனால், அடைக்கலம் தேடினார். அப்போது, மீண்டும் அ.தி.மு.கவில் இணைய லாம் என்று 

தன்னுடைய ஆதரவாளர் களுடன் ஆலோசித் துள்ளார். இந்தத் தகவல் தெரிந்ததும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 
மணி அமைச்சர், கட்சித் தலைமை யிடம் பேசி செந்தில் பாலாஜியைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று முட்டுக்கட்டை போட்டார். 

அவர் டி.டி.வி. தினகரனின் ஸ்லிப்பர் செல்லாக இங்கு வருவார் என்றும் கூறி யுள்ளனர். 


இதனால் அ.தி.மு.க. தலைமை யிடமிருந்து சிக்னல் வராததால் தான் அவர் தி.மு.க. வில் சேரும் சூழ்நிலை ஏற்பட்டது" என்றார்.

டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தி லிருந்து கொண்டே 

அரவக் குறிச்சியில் நடக்கும் இடைத் தேர்தலைச் சந்திக்க செந்தில் பாலாஜி தயாராகத்தான் இருந்தார். 

ஆனால், அவரிடம் டி.டி.வி தினகரன் கொடுத்த அசைமென்ட் களால் தான் அவர் ஆடிபோய் விட்டார். 

இதனால் தான் அவர், தி.மு.க.வில் சேர்ந்தார். நிச்சயம் அரவக் குறிச்சியில் அவருக்கு தி.மு.க. விலிருந்து சீட் ஒதுக்கப்படும். 

இது தவிர கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. வுக்கு பதிலடி செந்தில் பாலாஜி மூலம் கொடுக்க ஸ்டாலின் கணக்கு போட்டு வைத்துள் ளாராம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings