கஜாவால் பாலைவனமாக மாறிய மாவட்டத்தை சோலைவனமாக மாற்றும் முயற்சி !

0
கஜா புயலால் லட்சக்கணக் கான மரங்கள் சாய்ந்ததால் டெல்டா மாவட்டங்கள் பாலை வனமாக மாறியது 
கண்டு மீண்டும் சோலை வனமாக மாற்ற நாட்டு மரக்கன்று களை நடும் முயற்சியில் வனம் தன்னார்வ அமைப்பு ஈடுபட் டுள்ளது.

திருவாரூரில் வனம் தன்னார்வ அமைப்பு கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 


இதன் ஒருங்கிணைப் பாளராக கலைமணி என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் மட்டு மல்லாமல் 

தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிக ளில் மரக்கன்று களை 15 ஆண்டுகளாக நட்டு வருகிறார். 

இவருடன் பள்ளி மாணவர்கள் இதர தன்னார் வலர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்று களை நட்டு உள்ளதாக கலைமணி தெரிவித் துள்ளார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்ய த்தில் புயல் தாக்கியதை அடுத்து, 

டெல்டா மாவட்டமான திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங் களில் லட்சக்கணக் கான மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. 

இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.  


இதனைக் கண்டு வேதனை யடைந்த அந்த அமைப்புகள் மனம் தளராமல் தங்களது பணியை மீண்டும் தொடங்கி யுள்ளனர்.

வனம் தன்னார்வ அமைப்பின் சார்பில் கடந்த 29ஆம் தேதி புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங் களில் 

 ஒரு லட்சம் மரக்கன்று களை நட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த பணியை தொடங்கி யுள்ளனர். 
குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதலில் மரக்கன்றுகளை முழுமையாக நட வேண்டும். 

மேலும் சாலை யோரத்தில் மரக்கன்று களை நட வேண்டும் என்ற எண்ணத்தில் 

நான்கு மாவட்டங் களிலும் தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இன்று திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வனம் தன்னார்வ 

அமைப்புடன் இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் இதர தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து மரக்கன்று களை நட்டனர்.

குறிப்பாக வெளிநாட்டு மரங்களை அப்புறப்படுத்தி நாட்டு மரங்களாகிய அத்திமரம், 


ஆலமரம், அரசமரம், புங்கை மரம், போன்ற நாட்டு மரங்களை முழுமையாக நட்டு வருகின்றனர். 

விரைவில் பாலை வனமாக இருந்த இந்த டெல்டா மாவட்டங் களை சோலை வனமாக மாற்றுவதே எங்கள் எண்ணம் என்று அவர்கள் தெரிவிக்கி ன்றனர்.

தகவல்கள் : ராஜசேகர் - திருவாரூர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings