ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும்
அணுமின் நிலைய த்தை (‘அகடமிக் லோமோ னோசோவ்’ என்ற பெயரிலான கப்பல்) உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத் தின் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸி லிக்காசெவ் கூறும் போது,
‘‘உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தின் அணு உலை யினுடைய
செயல்பாட்டு சோதனை களை வெற்றிகர மாக நடத்தி முடித்துள்ளோம்.
10 சதவீத திறனுடன் இந்த அணு உலை தொடங்கப் பட்டுள்ளது.
இது திட்ட மிட்டபடி ரஷியாவின் பெவெக் நகரத்தை அடுத்த இலையுதிர் காலத்தி ற்குள் சென்று அடைந்து உற்பத்தியை தொடங்கும்.
மிகவும் தொலை தூரத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளு க்கு மின்சார வினியோகம்
செய்வதில் இந்த அணு உலை முக்கிய பங்கு வகிக்கும்’’ என்று கூறினார்.
மேலும், ‘‘இந்த புதிய அணு உலை, ரஷிய ஆர்க்டிக் பகுதி களுக்கு மட்டு மல்லாமல்,
உலகில் உள்ள எண்ணற்ற நாடுகளு க்கு நல்ல தீர்வாக அமையும்.
இந்த திட்டம் வெற்றி பெற்றி ருப்பதை யடுத்து சிறிய அணு உலை களுக்கான தேவை உலகம் முழுவதும் வெகுவாக அதிகரிக்கும்.
உலகின் அணு உலை தொழில் நுட்ப சந்தையில் ரஷியா முதலிடத்தில் இருக்கும்’’ எனவும் அவர் தெரிவித்தார்.
Thanks for Your Comments