ராஜஸ்தானில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்ட சபைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்தது.
கலாசாரத் தின் அடையாளம் என நான் விரும்பி அணியும் தலைப் பாகையை காங்கிரஸ் கட்சி
மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னரே அணிவேன் என்று அவர் உறுதி எடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும் பொழுது, சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் பல்வேறு
தருணங்களில் மக்கள் எனக்கு தலைப் பாகைகளை பரிசாக அளித்தனர்.
அவற்றை அணிவதற்கு பதிலாக, முன் நெற்றியில் தொட்டு விட்டு கீழே வைத்து விடுவேன்.
இந்த தேர்தலில் மக்களின் ஆசியால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். மீண்டும்
நான் தலைப் பாகையை அணிய முடியும் என முழு நம்பிக்கை யுடன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
முஸ்லிம் அதிகமுள்ள டோங்க் தொகுதியில் இருந்து முதன் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும்
சச்சின் பைலட்டுக்கு தலைப் பாகையை அணியும் வாய்ப்பு பற்றி டிசம்பர் 11 -ந்தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிய வரும்.
Thanks for Your Comments