'ஜி.ஹெச்சில் நடத்தப்பட்ட ரெய்டு - அதிர்ச்சி தகவல் !

0
தமிழகத்தி லுள்ள அரசு மருத்துவ மனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. 


ஒருசில மருத்துவ மனைகளில் கணக்கில் காட்டப் படாத பல ஆயிரக் கணக்கான ரூபாய் பணம் சிக்க, 

பல இடங்களில் ஒன்றும் கிடைக்காமல் வெறும் கையோடு தான் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திரும்பி யிருக்கின் றனர். 

வெறுங்கை யோடு திரும்பியது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் துளியும் வருத்தப்பட வில்லை. 

பணத்திற் காக ரெய்டிற்குச் சென்றி ருந்தால் தானே அவர்கள் வருத்தப் பட்டிருக்க வேண்டும். 

நடந்த ரெய்டில் பணத்திற் காக அல்ல என்ற பகீர் தகவல் கிடைத்தி ருக்கிறது.

தமிழகத் தின் பல மாவட்டங் களில் தலைமை அரசு மருத்துவ மனைகளில் ரெய்டு நடக்க, 

ஈரோடு மாவட்ட த்தில் எவ்வளவோ அரசு மருத்துவ மனைகள் இருந்தும், கோபிச்செட்டி பாளையம் 


அரசு மருத்துவ மனையில் மட்டும் தான் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டில் இறங்கினர். 

காலை சுமார் 11 மணியளவில் ஆரம்பித்த ரெய்டு இரவு 7 மணி வரை நீடித்தி ருக்கிறது. 

ரெய்டின் முடிவில் 'கணக்கில் காட்டப் படாத வெறும் 1000 ரூபாய் மட்டும் தான் கிடைத்தது' என லஞ்ச ஒழிப்புத் துறையினர் தகவல் தெரிவித் தனர்.

அரசு மருத்துவ மனைக்கு வரும் பொது மக்களிடம் ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற சிகிச்சை களுக்கு 

எக்கச்சக் கமாக மருத்து வர்கள் பணத்தைக் கறப்ப தாக புகார் வந்ததா கவும், 

அந்தத் தகவலை யொட்டி தான் ரெய்டு நடத்தப் பட்டதாகச் சொல்லப் பட்டாலும், 

ரெய்டின் போது அதைத் தவிர வேறொன்றைத் தான் லஞ்ச ஒழிப்புத் துறையினர் துருவித் துருவி கேட்டிருக் கின்றனர். 


அது மருத்துவ மனையில் ஸ்டாக்கில் இருக்கும் மருந்துகள் பற்றிய விவரங்கள் தானாம். 

'மருந்துகள் ஏதேனும் முறை யின்றி வெளியே போகிறதா?' என்றே துருவித் துருவி மருத்துவர் களை விசாரித் திருக்கின் றனர். 

மேலும், மருந்துகள் வைக்கப் பட்டிருக்கும் குடோனுக்குச் சென்று ஒவ்வொரு மருந்தையும் 

ஸ்டாக் லிஸ்டில் இருப்பதை வைத்து கிராஸ் செக் செய்திருக் கின்றனர். 

இந்தக் கோணத்தில் ரெய்டு நடக்கும் என்றறியாத மருத்து வர்கள் நடுங்கிப் போயிருக் கின்றனர். 

ரெய்டின் முடிவில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எதிர் பார்த்ததை விட பல பகீர் தகவல்கள் கிடைத் திருக்கின்ற னவாம்.

ஏற்கெனவே, கோவை பகுதியில் உள்ள ஒருசில மருத்துவ மனைகளில் பயன்படுத் தப்படும் 

ஒரு குறிப்பிட்ட போதை மருந்து, மருத்துவ மனையில் இருந்து திருடப் படுவதாக புகார் எழுந்தது. 


அதனை யடுத்து, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் மருந்து களுடைய இருப்பு என்ன 

என்கின்ற கோணத்தில் ரெய்டினை முடுக்கி யிருப்பது, பெரும் சந்தேக த்தை ஏற்படுத்தி யிருக்கிறது. 

விரைவில் இந்த ரெய்டு சம்பந்தமாக பல பகீர் தகவல்கள் வெளியாக வாய்ப்பி ருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings