பொதுத் துறை எண்ணெய் நிறுவன மான ஒ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க் கிணறு ஒன்று
ஆந்திராவில் நடுக்கடலில் ஒருபக்கமாகச் சாய்ந்திருந் ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை நேர் செய்ய கப்பற்படை ஹெலிகாப்டர் பணிக்கப் பட்டுள்ளது.
பெய்ட்டி புயலினால் இது ஒரு பக்கமாகச் சாய்ந்தி ருக்கிறது என்று இந்தியக் கப்பற் படையினர் தெரிவித்தனர்.
இது குறித்து நேவி செய்தித் தொடர்பாளர் தன் ட்விட்டரில், “ஒலிந்தா ஸ்டார் என்ற
எரிவாயுக் கிணறு கிருஷ்ணா கோதாவரி பேசினில் நடுக்கடலில் ஒரு பக்கமாகச் சாய்ந்து கடலில் லேசாக மூழ்கியது.
பெய்ட்டி புயல் உருவானதை யடுத்து விடுக்கப் பட்ட எச்சரிக்கை யினால் அங்கு பணி யாற்றிய வர்கள் கரை திரும்பினர்.
ஒலிந்தா ஸ்டார் அதன் பிறகு ஒரு பக்கமாகச் சாய்ந்தி ருந்தது, இது பெய்ட்டி புயலி னால் இருக்கலாம்,
கொஞ்சம் சேதமும் ஏற்பட்டுள்ளது” என்று பதிவிட் டுள்ளார்.
வங்காள விரிகுடாவில் காக்கிநாடா, ஏனாம் இடையே நடுக்கடலில் உள்ளது
ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் கிணறு, இது ஹைட்ரோ கார்பன் எடுப்பதற் கான கிணறாகும்.
ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் இது குறித்துக் கூறும் போது, வங்கக் கடலில் ‘ஒலிந்தா ஸ்டார்’ என்ற
இந்தக் கிணற்றை நிறுவியவர்கள் பிரேசில் நிறுவனத்தினர்.
அந்த நிறுவனம் தான் இதனை நடத்தி, செயல் படுத்தி, பராமரித்தும் வருகிறது. இதில் சுமார் 120 பேர் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.
ஆனால் கடந்த வாரம் கடும் புயல் எச்சரிக்கை யினால் இந்த எண்ணெய்க் கிணறு
நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு அனைவரும் கரைக்குத் திரும்பினர்.
ஆனால் பெய்ட்டி புயலுக்குப் பிறகு ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் கிணறு சாய்ந்தி ருந்ததைப்
இடி மின்னல் ஏற்படக் கூடிய ஆபத்தான பொருட்கள் மற்றும் இடங்கள் !
பார்த்து அதிர்ச்சி யடைந்தனர், பிறகு அதைச் சரி செய்யுமாறு அறிவுறுத்தினர்.
“பணி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது என்று எங்களு க்குத் தகவல் கிடைத் துள்ளது.
கிணற்றின் செயல் பாடுகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கி விடும் என்று ஓ.என்.ஜி.சி, மூத்த அதிகாரி தெரிவித்தார்.
Thanks for Your Comments