ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமை யாக தாக்கு !

0
தமிழகத்தின் ரிமோட் கண்ட்ரோல் டெல்லியில் இருக்கிறது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமை யாக விமர்சனம் செய்தார்.


கருணாநிதி, அண்ணா சிலை அண்ணா அறிவாலய த்தில் சோனியா காந்தியால் திறக்கப் பட்டது. 

இதை யடுத்து சோனியா, ராகுல் ஆகியோர் மெரினா வில் உள்ள கருணாநிதி யின் நினை விடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப் பட்டது.

இதை யடுத்து ஒய்எம்சிஏ மைதான த்தில் பொதுக் கூட்டம் தொடங்கியது. 

இந்த விழாவில் ஆந்திர மாநில முதல்வர் தமிழிலும் ஆங்கிலத் திலும் பேசினார். 

அப்போது அவர் பேசுகையில் அனைவரு க்கும் வணக்கம். தென் பாரதமே பெருமை கொள்ளும் நேரமிது.

மூத்த தலைவர்

கருணாநிதி யின் அரசியல் அனுபவம் இளைஞர் களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர். 

80 ஆண்டுக ளாக தமிழகத்தின் மக்களுக்கா பாடுபட்டவர் தலைவர் கருணாநிதி. 

50 ஆண்டுக ளாக திமுக தலைவராக இருந்தவரக் கருணாநிதி. இந்தியா வின் மிக மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி.

நினைவுக் கொள்வர்

ஒரு தேர்தலிலும் கருணாநிதி தோற்ற தில்லை. என்னை மிகவும் கவர்ந்தது. 


கருணாநிதி யின் சாதனையை எதிர்கால சந்ததியி னரும் நினைவுக் கொள்வர். 

நாட்டின் கூட்டாட்சி முறை மத்திய அரசால் முற்றிலும் சீர் குலைக்கப் பட்டுள்ளது. 

பாஜக கூட்டணிக்கு வாக்களித்த தால் நாம் மிகவும் அவதிக் குள்ளாகி யுள்ளோம். 

சிபிஐ, அமலாக்கத் துறை, ஆர்பிஐ ஆகிய வற்றில் ஊழல் நடந்துள்ளது.

சீரழிவு

இரவோடு இரவாக சிபிஐ இயக்குநர் மாற்றப்பட்டு விட்டார். 

ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேலுக்கு நெருக்கடி கொடுத்து அவரை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். 

நாட்டின் அனைத்து அரசு அமைப்பு களையும் மத்திய அரசு சீரழித்து வருகிறது.

சரிவு

வலிமையான மாநிலங்களே வலிமையான நாட்டை உருவாக்கும். 

தமிழக அரசை ரிமோட் கன்ட்ரோல் மூலம் டெல்லியி லிருந்து இயக்கி வருகிறது. 


பண மதிப்பிழப்பு மக்களுக்கு பலன் தரவில்லை. மோசமான நிர்வாகத் தால் விவசாயம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

முறைகேடுகள்

ரிசர்வ் வங்கி நிர்வாகத்தை மத்திய அரசு சீரழித்து விட்டது. 

விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் வங்கியில் பெற்ற கடனை திருப்பி 

செலுத்தாத தன் மூல்ம வங்கித் துறையி லும் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன.

ஆன்மா சாந்தியடையும்

ரஃபேல் விவகா ரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்ரத்தில் தவறான தகவலை தந்து சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது. 

ஸ்டாலினை தமிழக மக்கள் ஆதரித்து அவரை முதல்வராக் கினால் மட்டுமே 

கருணாநிதி யின் ஆன்மா சாந்தி யடையும் என்றார் சந்திரபாபு நாயுடு.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings