2018-ம் ஆண்டுக் கான உலக அழகிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 118 இளம் பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த பிரமாண்ட அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழக த்தைச் சேர்ந்த அனுக்கீர்த்தி பங்கேற்றார். இவர் இந்திய அழகியாகத் தேர்வு செய்யப் பட்டிருந்தார்.
இறுதிப் போட்டி க்குத் தகுதிபெறும் சுற்றில் 30 பேரில் அனுக்கீர்த்தி இருந்தார். ஆனால் 12 பேர் கொண்ட இறுதிப் போட்டிக்கு அவர் தேர்வாக வில்லை.
மெக்சிகோவைச் சேர்ந்த வனசா போன்ஸ் டி லியான் உலக அழகி யாகத் தேர்வு செய்யப் பட்டார்.
இவருக்குக் கடந்தாண்டு உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த மனுசி சில்லர் கீரிடம் அணிவித்தார். வனசா டி லியான் 68-வது உலக அழகியாக அறிவிக்கப் பட்டார்.
Thanks for Your Comments