தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண், தன் கண்வர் தங்கத்தில் தாலி வாங்கி தராததால்,
சென்னை அரியலூரை சேர்ந்தவர் ஆதவன். பொறியாளரான இவரும், ராமநாதபுரத்தை சேர்ந்த இளவரசி என்பவரும்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
அப்போது முதலில் நண்பர்களாக இருந்த இவர்கள் அதன் பின் காதலர்களாக மாறினர்.
இருவரும் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரின் பெற்றோர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் இருவரும் பெற்றோரை எதிர்த்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
அப்போது ஆதவன் மஞ்சள் கயிற்றால், இளவரசிக்கு தாலி கட்டியுள்ளார்.
இதையடுத்து திருமணத்திற்கு பின்னர், தாம்பரம் அடுத்த சேலையூர் பாரதி நகரில் இருவரும் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.
திருமணமான நாள் முதலே தனக்கு தங்கத்தில் தாலி வேண்டும் என்று இளவரசி ஆதவனிடம் கேட்டுள்ளார்.
இப்படி அடிக்கடி தங்கத்தில் தாலி வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் இளவரசி வேறு கர்ப்பமாகியுள்ளார். ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த போது,
அவர் மீண்டும் தன் கணவரிடம் தங்கத்தில் தாலி வேண்டும் என்று கேட்க,
ஆத்திரமடைந்த ஆதவன் மனைவியை கடுமையான வார்த்தைகளால் திட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
சிறுவயது முதலே ஆசைபட்ட தெல்லாம் வாங்கிக்கொடுத்து வளர்த்த பெற்றோரை விட்டு, காதலனே முக்கியம் என்று சென்ற இடத்தில்,
தனது காதல் கணவனின் சுடுசொல்லை தாங்காமல் மனஉளைச்சலில் இருந்த இளவரசி படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
தனது கர்ப்பிணி மனைவி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு வீடு திரும்பிய கணவன் ஆதவன் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்க்கு வந்த பொலிசார்
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்காக இளவரசியின் சடலம் எடுத்து செல்லப்பட்டபோது ஆறுதல் கூறுவதற்கு கூட ஆள் இல்லாமல்
மனைவியின் சடலம் கிடத்தப்பட்டிருந்த ஸ்ட்ரெச்சரை பிடித்துக் கொண்டு கணவன் ஆதவன் கதறி அழுதார்.
இருப்பினும் இளவரசியின் மரணம் குறித்து கணவர் ஆதவனிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks for Your Comments