உத்தர பிரதேசத்தில் போலீஸ் அதிகாரியை கொன்றதாக 8 இந்துத்துவா அமைப்பை சேர்ந்த பசுக்காவலர் கள் கைது செய்யப்பட்டு இருக்கி றார்கள்.
நேற்று முதல்நாள் உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற கிராமத்தில் பசுக்களை கொன்று விட்டதாக பசுக்காவலர்கள் பெரிய கலவரம் செய்தனர்.
இந்த கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் பசுக்காவலர்களால் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குறித்தும், பசுக்காவலர்கள் எப்படி தீவிரவாதிகள் போல திட்ட மிட்டு செயல் படுகிறார்கள் என்றும் நிறைய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கைது செய்யப் பட்டான்
இந்த கொலையில் முதல் குற்றவாளி யோகேஷ் ராஜ் என்ற பசுக்காவல் படையை சேர்ந்த இளைஞன் தான்.
இவன் இந்துத்துவா அமைப்பான பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவன். இவனை இன்னும் போலீஸ் அதிகாரிகள் கைது செய்ய வில்லை.
இவன் தான் கொலை மற்றும் கலவரத்தை தூண்டியது என்று புகார் வைக்கப் பட்டுள்ளது.
இயக்கத்தை சேர்ந்தவர்கள்
இவனுடன் சேர்த்து மொத்தம் 28 பேர் குற்றஞ் சாட்டப்பட்டு இருக்கி றார்கள். இதில் 8 பேர் இந்து வாஹினி, சிவசேனா, பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ், பாஜகவை சேர்த்தவர்கள்.
இவர்கள் தான் கலவரத்தை முன்னின்று நடத்தியது. மீதமுள்ள வர்கள் எதோ ஒரு வகையில்
இந்துத்துவா அமைப்புகள் நடத்தும் எல்லா கலவரத்தில் கலந்து கொண்டு கலவரம் செய்யும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
படிப்பும் வேலையும் இல்லை
இதில் இருக்கும் 90 சதவிகிதம் பேர் படிக்காதவர்கள். மேலும் கல்லூரி செல்லும் சிலரை தவிர்த்து மீதமுள்ள யாரும் வேலைக்கு செல்ல வில்லை.
அங்கு நடக்கும் இந்து பண்டிகைகள் மூலம் வசூல் ஆகும் பணத்தை வைத்து தான் இவர்கள் காலத்தை தள்ளி வருகிறார்கள்.
எல்லோரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
வேலையை விட்டு விட்டு சேர்ந்தனர்
இதில் சிலர் தாங்கள் பார்த்த வேலையை விட்டு விட்டு வந்த இப்படி போராட்டம் கலவரம் என்று குதித்து இருக்கிறார்கள்.
இதில் முதல் குற்றவாளி யோகேஷ் ராஜ் கூட வேலையை விட்டு விட்டு தான் பஜ்ரங் தள் அமைப்பில்
சமூக சேவை செய்பவனாக 4 வருடம் முன் சேர்ந்து இருக்கிறான். இவனை பார்த்து பலர் அந்த அமைப்பில் சேர்ந்துள்ளனர்.
இப்படித் தான்
இவனின் சின்ன, சரியாக சிமெண்ட் கூட பூசாத வீட்டில் இந்தியாவின் வரைபடம் பூடான், சீனா, பாகிஸ்தான் எல்லாம் சேர்த்து ஒரே படமாக பாரத மாதாவுடன் வரையப்பட்டு இருக்கிறது.
பிரிக்கப் படாத இந்தியா என்றும் அதில் எழுதி இருக்கிறது. அங்கு இருக்கும் பலரது வீடுகள் இப்படித் தான் உள்ளது.
துப்பாக்கி கலாச்சாரம்
இவன் உட்பட அங்கு இருக்கும் பல பசுக்காவலர் கள் வீட்டில் துப்பாக்கிகள் சர்வ சாதாரண மாக புழங்கும் என்று ஊர் மக்கள் தெரிவிக் கிறார்கள்.
சாதாரண தெரு சண்டையில் கூட இவர்கள் துப்பாக்கியை தூக்கி காட்டி பிரச்சனை செய்வது,
கோவில் விழாவில் வானத்தில் துப்பாக்கி யால் சுடுவது என்று வாழ்ந்து வருவதாக அம்மக்கள் தெரிவிக் கிறார்கள்.
Thanks for Your Comments