ராமேஸ்வரத் துக்கு செல்லும் பாம்பன் ரயில் பாலத்திற்கு பதிலாக 250 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாலம் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம்- பாம்பனை இணைக்கும் ரயில் பாலம் 104 ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்டு, 2004ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
சென்னையில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் விரைவு ரயில்கள் இப்பாலத்தின் வழியாக இயக்கப்பட்டு வந்தன.
அண்மையில் பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, ராமேஸ்வரத் திற்கு செல்ல வேண்டிய ரயில்கள் மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், புத்தாண்டு பரிசாக, பாம்பன் பாலத்திற்கு பதிலாக புதிய ரயில் பாலம் கட்டப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
பழைய பாலம் 104 ஆண்டுகளைக் கடந்து விட்டதாலும், தூக்குப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப் பதாலும் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
250 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் புதிய பாலத்திற்கான ஆய்வுப் பணிகள் முடிவடைந்து விட்டன.
தற்போதுள்ள பாலத்திற்கு அருகிலேயே, அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் பாலம் கட்டப்பட உள்ளது.
இதனால் ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும். இரட்டை ரயில் பாதையாக இரண்டரை கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பாலம் அமையும். 63 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ள தூக்குப் பாலம் செங்குத்தாக திறந்துமூடும் வகையில் இருக்கும்.
புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கப்பட்டு, நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Thanks for Your Comments