ரயில்வே ஊழியர் களுக்கான கிரிக்கெட் போட்டியின் போது விளையாட்டு வீரர்
ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
ரயில்வே ஊழியர் களுக்கான கிரிக்கெட் போட்டி போபாலில் நடைபெற்று வருகிறது.
ரயில்வே ஊழியர் களுக்கு இடையே வருடந்தோறும் இந்தப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
போபால் ரயில்வே கோட்டம் நிர்வாகம் இந்த போட்டிகளை நடத்தி வருகிறது.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் டீசல் ஷீல்ட் லெவன் மற்றும்
எலெக்ட்ரிகல் லெவன் அணிகளுக் கிடையே யான போட்டி நடைபெற்றது.
போட்டிக்கு பின்னர் வீரர்கள் மைதான த்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிரு க்கும் போது அரவிந்த் ஹோடியா என்ற வீரருக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளது.
தனக்கு நெஞ்சு வலிப்பதாக சக வீரர்களிடம் தெரிவித் துள்ளார்.
ரயில்வே மைதானத்தில் போதிய வசதிகள் இல்லாததால் அவரை 3 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள ரயில்வே மருத்துவ மனைக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டது.
மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி அரவிந்த காலமானார்.
மாரடைப்பின் காரணமாக அவர் மரண மடைந்ததாக மருத்துவ மனை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அந்த அணியைச் சேர்ந்த நிர்வாகி மனோஜ் ராய்க்வார் கூறுகை யில், ``போட்டி முடிந்த
பிறகு நாங்கள் அனைவரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந் தோம் அரவிந்த தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்தார்.
நாங்கள் அவரை ரயில்வே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுமாறு அறிவுறுத் தினோம்.
சிறிது நேரம் கழித்து தனக்குத் தொடர்ந்து வலி இருப்பதாகத் தெரிவித்தார்.
ரயில்வே மைதானத்தில் போதுமான வசதிகள் இல்லை.
இதனை யடுத்து இருசக்கர வாகனத்தில் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம்.
அவருக்கு எதனால் வலி ஏற்பட்டது என்பது குறித்து தெரியாமல் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம்.
மார்பில் வலது பக்கத்தில் வலி இருப்பதாகத் தெரிவித்தார்.
அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார். சிகிச்சையின் போது உயிரிழந் ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்’’ என்றார்.
Thanks for Your Comments