யார் என்ன சொன்னாலும், போயஸ் கார்டன் இல்லம் எங்களுக்குக் கோயில் தான் என்று
திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி யில் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் தெரிவித்தி ருக்கிறார்.
திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் இன்று நடைபெற்ற அம்மா இருசக்கர வாகனம் வழங்கும்
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டார்.
திட்டத்தைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர் களைச் சந்தித்த அவர், ``சுமார் 643 பயனாளி களுக்கு
ரூபாய் 1.6 கோடி மதிப்பீட்டில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப் பட்டிருக்கின் றன.
மேலும், கோமாரி நோயின் தாக்கம் அதிகம் உள்ள ஈரோடு மாவட்டத்தில் 85 மருத்துவ குழுக்களும்,
திருப்பூர் மாவட்டத்தில் 45 மருத்துவ குழுக்களும் அமைக்கப் பட்டு கோமாரி நோய்க்கான தடுப்பூசிகள் போடப் பட்டிருக்கின் றன.
இதனால் தற்போது கோமாரி நோய் பரவாமல் கட்டுப் படுத்தப் பட்டும் உள்ளன.
அத்துடன் முன்னெச்சரி க்கை நடவடிக்கை யாகத் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங் களில்
வரும் டிசம்பர் 25-ம் தேதி வரை கால்நடை சந்தைகள் நடத்துவ தற்கு அந்தந்த
மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தடை விதித்திருக் கிறோம்’’ என்றார்.
அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிட மாக மாற்ற
அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளதைப் பற்றிச் செய்தி யாளர்கள் அவரிடம் கேட்டனர்.
அப்போது, ``போயஸ் கார்டன் வேதா இல்லம் என்பது எங்களின் அம்மா வாழ்ந்த வீடு.
நாங்கள் எல்லாம் கோயிலாக மதிக்கும் அந்த வீட்டைப் பற்றி யாரும் எந்த விதமான தவறான கருத்தும் சொல்லி விட முடியாது.
அப்பகுதி யில் இருப்பவர்கள் என்ன சொன்னாலும், எங்களுக்கு அந்த இடம் கோயில் தான்’’ என்று கூறி விட்டுச் சென்றார் அமைச்சர்.
Thanks for Your Comments