இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது எஸ். ராம கிருஷ்ணனு க்கு வழங்கப் பட்டுள்ளது.
அவர் எழுதி 2015ல் வெளியான 'சஞ்சாரம்' நாவலுக்கு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.
பக்கிரி என்ற பாத்திரத்தின் மூலம் நகரும் இந்த நாவல் நாதஸ்வர இசை, நாதஸ்வர
இசைக் கலைஞர்களை அடிப்படை யாகக் கொண்டது. பெரிதும் அவர்களது துயரம் குறித்துப் பேசுகிறது.
"நாதஸ்வர இசைக் கலைஞ்களில் தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படும்
அளவுக்கு கோவில்பட்டி போன்ற கரிசல் பகுதியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்பட வில்லை.
இந்தக் கலைஞர்களின் துயரத்தை, வாழ்க்கையை, வாழ்க்கை இவர்களை அடிக்கும் அடியை
இந்த நாவல் சொல்கிறது" என தனது சஞ்சாரம் நாவல் குறித்து பிபிசி யிடம் பேசினார் எஸ். ராம கிருஷ்ணன்.
"தஞ்சாவூரில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர் களுக்கு கிடைத்த வாழ்க்கை போல இவர்களுக்கு அங்கீகாரமோ,
ஊதியமோ கிடைக்க வில்லை. இவர்கள் தங்கள் ஊர்களில் விவசாயம் சார்ந்து வாழ்ந்தார்கள்.
விவசாயம் அழிந்த வுடன் இவர்களும் அழிந்தார்கள். இவர்களுக்கு படிப்பு இல்லை.
நாதஸ்வரக் கலையைக் கற்று க்கொள்ள 7 - 8 வருடம் பயிற்சி தேவை. அதைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு வசதி யில்லை.
ஆகவே மெல்ல மெல்ல அந்தக் கலையி லிருந்து இந்தக் கலைஞர்கள் வெளியேறி வருகிறார்கள்" என்கிறார் எஸ். ராம கிருஷ்ணன
உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சுப நிகழ்வுகளில் நாதஸ்வர இசையை பயன்படுத்து கிறார்கள்.
இப்படியாக மற்றவர் களை மகிழ்ச்சிப் படுத்தும் இந்தக் கலைஞர்கள் மகிழ்ச்சி யாக இல்லை என்கிறார் ராம கிருஷ்ணன்.
"தமிழ் இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தனு க்குப் பிறகு எழுத வந்தவர்களில் மிக முக்கியமான இரண்டு பேர் ஜெயமோகனும், எஸ். ராம கிருஷ்ணனும்.
இருவருமே எழுத்தின் மூலமாகவே பிரபல மடைந்தவர்கள்.
குறிப்பாக எஸ். ராம கிருஷ்ணன், பதின் வயதிலிருந்து எழுத்தாளராக வேண்டுமென நினைத்து புறப்பட்டவர்.
தொடர்ந்து பயணம் செய்தவர். பல மக்களின் வாழ்வைப் பார்த்தவர்.
இந்தப் பயணங்கள் தான் அவரது எழுத்தின் அடிப்படையாக இருந்தன" என்கிறார் கவிஞர் ரவி சுப்ரமணியன்.
இந்த சஞ்சாரம் நாவலுக்காக இசைக் கலைஞர்க ளுடன் பழகி, அவர்கள் புழங்கும்
சொற்களை எஸ். ராம கிருஷ்ணன் கற்றுக் கொண்ட தாகச் சொல்கிறார் ரவி சுப்ரமணியன்.
1966ல் விருதுநகர் மாவட்டம் மல்லாங் கிணறு கிராமத்தில் பிறந்த எஸ். ராம கிருஷ்ணன்,
ஒரு முழுநேர எழுத்தாளர். 18 சிறுகதைத் தொகுப்புகள், சஞ்சாரம், உபபாண்டவம் உள்பட 9 நாவல்கள்,
36 கட்டுரைத் தொகுப்புகள், 8 திரைப்பட நூல்கள், குழந்தை களுக்கென 15 புத்தகங்கள்,
இரண்டு வரலாற்று நூல்கள், 3 நாடகத் தொகுப்புகள், 2 நேர்காணல் தொகுப்புகள்,
மூன்று மொழி பெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட நூல்களை வெளி யிட்டிருக்கிறார்.
விகடனில் மாணவப் பத்திரிகை யாளராக தன் எழுத்துப் பணியைத் துவங்கிய எஸ். ராம கிருஷ்ணன், அவ்வப்போது பல இதழ்களுக் காக பணியாற்றி யிருக்கிறார்.
"ஆனால், ஒரு நிறுவனத்தில் என பணியாற்றிய தில்லை.
ஒரு கட்டத்தில் முழு நேர எழுத்தாளராக இருப்பதென முடிவு செய்து விட்டேன்" என்கிறார் எஸ். ராம கிருஷ்ணன்.
Thanks for Your Comments