பத்திரிகை யாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பாக குறித்து ஐ.நா. விசாரணை நடத்துவது குறித்து, அந்த அமைப்பின் பொதுச் செயலருடன் ஆலோசனை நடத்தியதாக துருக்கி தெரிவித் துள்ளது.
இது குறித்து தலைநகர் அங்காராவில் செய்தி யாளர்களிடம் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு கூறியதாவது:-
இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத் தில் செய்தியாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப் பட்டது குறித்து ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விரும்பு கிறோம்.
இது தொடர்பாக, ஐ.நா.பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் சக வெளியுறவுத் துறை அமைச்சர் களுடன் பேசி யுள்ளோம். இது குறித்து மேற்கொண்டு ஆலோசனை நடத்துவோம்.
அர்ஜென்டினா வில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டின் போது, கஷோகி கொலையில் தொடர்புடை யவர்கள் குறித்து
உண்மையை வெளிக்கொணர, ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உறுப்பு நாடுகள் விரும்பின என்று அவர் தெரிவித்தார்.
Thanks for Your Comments