திருப்பூரில் பட்டப் பகலில் கிளி ஜோசியர் ஒருவர் நடுரோட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி யிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்துள்ள பாரதிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.
இவர் கடந்த 10 வருடங் களுக்கும் மேலாகத் திருப்பூர் குமரன் சாலைப் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்கா அருகே கிளி ஜோசியராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினமும் வழக்கம் போல கிளி ஜோசியம் பார்ப்பதை முடித்து விட்டு, மதிய உணவு சாப்பிடு வதற்காகக் கிளம்பி யிருக்கிறார் ரமேஷ்.
அப்போது அவரைப் பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரமேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருக்கிறார்.
அத்துடன் கொலை செய்த கையோடு, தான் கொண்டு வந்திருந்த துண்டு பிரசுரங் களையும் அப்பகுதியில் இருந்த பொது மக்களின் முன்பாக வீசிவிட்டுத் தப்பி யோடியிருக் கிறார்.
அந்தத் துண்டு பிரசுரங்களில், ``பூங்காவுக்கு வரும் பெண்கள்மீது தீய சக்திகளை ஏவி விட்டு, அவர்களைத் தன் வசமாக்கி தவறாகப் பயன் படுத்துவதே ஜோசியர் ரமேஷுக்கு வேலை.
கடந்த 2016-ம் ஆண்டு என்னுடைய பெண் தோழியுடன் அந்தப் பூங்காவுக்கு வந்தேன்.
அப்போது ரமேஷிடம் ஜோசியம் பார்த்து விட்டுச் சென்றதில் இருந்தே என்னுடைய பெண் தோழி என்னிட மிருந்து விலகிச் சென்று விட்டார்.
இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்றுகூட தெரியவில்லை. இதுபோல பல குடும்பங்களை ஜோசியர் ரமேஷ் சீரழித்தி ருக்கிறார்.
அவருக்குப் பின்னால் சில அரசியல் வாதிகள், பனியன் நிறுவன முதலாளிகள் மற்றும் காவல்துறை அதிகாரி களும்கூட இருக்கிறார்கள் என்று எழுதப் பட்டிருக்கிறது.
கொலையில் ஈடுபட்ட நபர் ஹெல்மெட் அணிந்திருந் ததால், அவர் யார் என்பதைக் கண்டறிய காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோசியர் ரமேஷால் பாதிக்கப்பட்ட நபராக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதால் அது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட் டுள்ளது.
பரபரப்பான சாலையில் பட்டப் பகலில் நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் பொது மக்களிடையே பெரும் பதற்றத்தை யும் அச்சத்தையும் ஏற்படுத்தி யிருக்கிறது.
Thanks for Your Comments