பிளாஸ்டிக் தடை உத்தரவு எதி ரொலியாக பாத்திரம் கொண்டு வராத பொது மக்களுக் காக உணவு டன் சேர்த்து டிபன் பாக்ஸ்களை விற்பனை செய்ய ஓட்டல் உரிமை யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து பொது மக்களை மாற்ற ஓட்டல்களில் உணவு வாங்க வருபவர்கள் பாத்திரங் களை கொண்டு வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று
தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. ஆனால், பொது மக்கள் பெரிதாக ஆர்வம் காட்ட வில்லை.
பிளாஸ்டிக் பொருட்களு க்கு பதிலாக துணிப்பை, உணவு பேக்கிங் செய்யும் மாற்று பொருளை சந்தையில் வாங்கினால் கூடுத லாக செலவாகும்.
எனவே, பாத் திரம் கொண்டு வராத பொதுமக் களுக்காக கேரியர் டிபன் பாக்ஸ் களை உணவுடன் சேர்த்து விற் பனை செய்ய ஓட்டல் உரிமை யாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து, சங்கத்தின் மாநில தலைவர் வெங்கட சுப்பு கூறிய தாவது:
நுகர்வோர், வீட்டில் இருந்தே பாத்திரங் களைக் கொண்டு வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்தோம். ஆனால், மக்கள் வீட்டில் இருந்து பாத்தி ரங்களை எடுத்து வந்து உணவு களை வாங்க பெரிதாக ஆர்வம் காட்ட வில்லை.
பிளாஸ்டிக் பயன் பாட்டைத் தவிர்த்து துணிப்பை, உணவு பேக்கிங் செய்வதற்கான மாற்றுப் பொருளைப் பயன்படுத் தினால் செலவு அதிகமாகும்.
விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில்தான் அதனை ஈடு செய்ய வேண்டி யிருக்கும்.
எனவே, பாத்திரம் கொண்டு வராத பொது மக்களுக் காக கேரியர் டிபன் பாக்ஸ்களை உணவுடன் சேர்த்து விற்பனை செய்யலாம் அல்லது முன்பணம் செலுத்தி உணவுடன் கேரியர் டிபன் பாக்ஸ்களை எடுத்துச் செல்பவர்கள்
மீண்டும் டிபன் பாக்ஸை திருப்பி அளித்தால் அதற்கான தொகையை திருப்பி கொடுக்கலாம் என்று திட்ட மிட்டுள்ளோம். இதற்காக மொத்த வியாபாரிகளிடம் பேசி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Thanks for Your Comments