பல்லி என்ற சொல் பிராணிக்கும், இனத்திற்கும் சொல்லப் படுகின்றது. Lizard என்ற பொருளில் பல்லி எனப்படுவது இனத்தைக் குறிக்கின்றது. இதில் மொத்தம் ஆறாயிரம் இனங்கள் உள்ளன.
அவ்வளவு அவதானம் அவற்றுக்கு உண்டு. அவ்வாறே இயற்கை அணர்த்தங் களையும் முன் கூட்டியே உணரக்கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு.
வாலை சுழற்றுதல் என்பன தகவல் பறிமாற்றத் திற்காகக் கையாளும் உடலசைவு களாகும்.
இதனால் பல்லிகள் தப்பி விடுகின்றன. அதே போன்று மேலே கூறியது போல் வாலைத் துண்டித்துக் கொண்டும் தப்பித்து விடுகின்றன. மரப் பல்லி, இலை சரகுப் பல்லி இவற்றின் நிறமும், இவற்றின் உடல் மீது உள்ள வண்ணத் திட்டுகளின் நிறமும்
இவை வாழும் இடத்துடன் ஒத்திருப்பதால் இவை இருப்பதே இவற்றின் எதிரிகளின் கண்களுக்குத் தெரியாது.
இவ்வாறு புச்சிகளின் சனத்தொகையைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதில் பல்லிகளின் பங்கு முக்கியமானது. மட்டுமன்றி இனிப்புகளையும் விரும்பி உண்ணும். குடித்துவிட்டுவைத்த தேனீர் கோப்பை, எச்சில் பீங்கான் என்பவற்றிலும் இவை ருசி பார்க்கும்.
அவற்றில் வீட்டுச் சுவர்களில் ஓடும் பல்லி முதல் ஓனான், உடும்பு, சலமந்தரா (கபரகொயா), முதலை, கொமோடோ ட்ராகன் என பல இனங்கள் உள்ளடங்கும்.
அடுத்து பல்லி எனக் குறிப்பது எம் வீட்டுச் சுவர்களில் ஓடித்திரியும் ஆங்கிலத்தில் Gecko அழைக்கப்படும் பல்லி களையாகும். இங்கு நாம் நோக்க இருப்பது வீட்டுப் பல்லிகளையே! Gecko இனப் பல்லிகளில் சுமார் 1500 வகை இனங்கள் இதுவரை கண்டறியப் பட்டுள்ளன.

வீட்டுப் பல்லி, மரப் பல்லி, சரகு இலைப் பல்லி, பச்சை நிறப் பல்லி, சிறுத்தைப் பல்லி, கீலா மான்ஸ்டர் என இன்னும் எவ்வளவோ வகைகள் இருக்கின்றன. இவற்றில் கீலா மான்ஸ்டர் அதிக விஷத்தன்மை கொண்ட பல்லியாகும்.
ஊர்வன இனத்தைச் சேர்ந்த இப் பல்லிகள் குளிர் இரத்த உயிரிகள் என்பதால் உலகின் உஷ்ணப் பிரதேசங்களிலேயே வாழ்கின்றன. பல்லிகள் பாலை நிலங்களிலும், மணல் மேடுகளிலும், மரங்களிலும், புற் புதர்களிலும் வாழ்கின்றன.
இவற்றை அதிகமாக எமது வீடுகளில் கண்டு கொள்ளலாம். வாசல், சமயலறை, சாப்பாட்டறை, களிவறை என எல்லா பகுதிகளிலும் சுவர்களில் ஓடித்திரிவதைக் காணலாம்.
உடலமைப்பில் இறை அற்புதம்
1. கண்கள் :
பல்லிகளுக்கு சிறந்த பார்வைச் சக்தி உண்டு. இருளிலும் அவற்றால் நன்கு பார்க்க முடியும். அதிகமான வீட்டினப் பல்லிகளுக்கு இமைகள் காணப்படுவ தில்லை. எப்போதும் கண்கள் திறந்தே இருக்கும்.
எனவே அவை கண்களில் படியும் தூசியை அவ்வப்போது நாக்கினால் நக்கி சுத்தம் செய்து கொள்ளும். வேறு சில வகைப் பல்லிகளுக்கு இமைகள் உண்டு. மனித பார்வைத் திறனை கணக்கிடும் போது
இதன் பார்வை திறன் 350 மடங்கு கூர்மை கொண்டதாக உள்ளது. இதனால் பார்வை நேர் கோட்டில் மட்டுமே செலுத்த முடியும் என்பது பெரும் குறை.
இதன் பார்வை திறன் 350 மடங்கு கூர்மை கொண்டதாக உள்ளது. இதனால் பார்வை நேர் கோட்டில் மட்டுமே செலுத்த முடியும் என்பது பெரும் குறை.
2. கூர்ந்த அவதானம் :
மற்ற ஊர்வண வற்றைவிட ஓணானுக்கும் பல்லிக்கும் அவதானம் அதிகம். வீட்டுப் பல்லிகளை நன்கு உற்று நோக்கிப் பாருங்கள். எமது செயற் பாடுகளை அவை கூர்மையாக நோக்கும். எமது அசைவுகளை அவை அளந்து அதற்கேற்ப செயற்படும்.
உணவுப் பாத்திரங்கள், தேனீர்க் கோப்பைகள் வைக்கும் இடங்களுக்கு நேராக உச்சத்திற்கு வந்து மேலிந்து சிறுநீர், அல்லது மலம் கழிக்கும். நாம் களிவறை சென்றாலும் அதிலுள்ள பள்ளிகள் எம்மையே உற்றுப் பார்த்து கொண்டிருக்கும்.
அவ்வளவு அவதானம் அவற்றுக்கு உண்டு. அவ்வாறே இயற்கை அணர்த்தங் களையும் முன் கூட்டியே உணரக்கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு.
3. நாவு :
பாம்புகளைப் போலவே பல்லிகளும் காற்றை நாவினால் துழாவி மோப்பம் பிடிக்கும் ஆற்றல் கொண்டவை. இதன் மூலம் தமது உணவையும் எதிரியையும் பிரித்தறிந்து கெள்ளும்.
நாக்கில் இருக்கும் பசை போன்ற ஒட்டும் தன்மை கொண்ட ஒருவகைப் பதார்த்தம் இறைகளை இலகுவாகப் படித்துண்ண உதவுகின்றது. கணப்பொழுதில் ஒரு இறையை பல்லி தனது நாவைப் பயன்படுத்தி பற்றிக் கொள்ளும்.
4. உடற் பகுதி :
உடல் எப்போதும் தரையுடன் ஒட்டியதாக இருக்கும். பாம்பைப் போன்று வளைந்து செல்லக் கூடிய தகவமைப்பையும் கொண்டிருக்கும். நீலம், பச்சை, பழுப்பு, வெள்ளை, மஞ்சள் என்ற நிற வித்தி யாசங்களில் பல்லிகளைக் காணலாம்.
இவை தாம் வாழும் சூழலுக்குத் தக்கவாறு உடல் நிறங்களைக் கொண்டுள்ளன. இன்னும் சில பல்லிகள் தேவைக்கேற்ப தங்கள் உடல் நிறத்தை மாற்றிக் கொள்ளவும் செய்கின்றன.
சில பல்லிகள் குறிப்பிட்ட காலத்தில் தமது பழைய தோல்களை உறித்துக் களற்றி விட்டு புது வடிவம் பெறுகின்றன. வெள்ளை நிறப் பல்லிகளின் உடல் உற்பகுதிகள் வெளியே தெரியக் கூடிய வித்த்தில் மெலிதாக அமைந்திருக்கும்.
5. கால்கள் :
பல்லிகள் சுர சுரப்பான, வழு வழுப்பான சுவர்களில் செங்குத்தாக ஊர்ந்து செல்வதைப் பார்த்திருப்பீர். சில போது சிவிலின்களில் தலைகீழாக கூட நகர்ந்து செல்லும்.
இரும்பு, பிளாஸ்டிக் ஏன் கண்ணாடிகளில் கூட எவ்வாறு அவற்றால் நகர்ந்து செல்ல முடிகிறது? சிந்தித்ததுண்டா? சுபஹானல்லாஹ்! அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பாருங்கள்.
சுர சுரப்பான பகுதிகளில் நடக்கும் போது விரல்களையும் நகங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் வழு வழுப்பன பகுதிகளில் நடக்க வேறு ஒரு உத்தியைக் கையாள்கின்றன.
பல்லிகளின் கால் பாதங்களில் 14,000 க்கும் மேற்பட்ட நுண்ணிய காற்றுப் பைகள் காணப் படுகின்றன. இவை உறிஞ்சு குலாய்கள் போன்று செயற்படுகின்றன.
கண்ணாடி போன்ற வழு வழுப்பான பகுதிகளில் நடக்க இந்த உறிஞ்சும் காற்றுப் பைகளைப் பயன்படுத்து கின்றன. காலை வழு வழுப்பான சுவற்றில் வைத்ததும் பாதத்தினடியில் உள்ள காற்றினை வெளியேற்றி அப்பகுதியை ஒரு சூன்யப் பகுதியாக மாற்றுகின்றன.

உடனே சுவற்றில் பாதங்கள் பலமாக ஒட்டிக் கொள்ளும். மீண்டும் காலை விடுவிக்க நாடினால் காற்றுப் பைகளுடாக காற்றைக் கொண்டு வருகின்றன. கால்கள் விடுவிக்கப்படும்.
இவ்வாறு அவை நடைபோடுகின்றன. இந்தக் காற்றுப் பைகளைப் பயன்படுத்தி தனது எடையைப் போல் 8 மடங்கு அதிக எடையை ஒரு காலினால் தூக்க முடியும்.
6. வால் :
எதிரிகளிட மிருந்து தப்பித்து தம் உயிரைக் காத்துக் கொள்ள இவை தமது வாலை ஒரு துரும்பாகப் பயன்படுத்து கின்றன. பல்லியைப் பிடிக்க எதிரி விலங்கு முயற்சித்தால் உடனே அவை தமது வாலைத் துண்டித்து விட்டு ஓடிவிடும்.
துண்டான வால் சில நிமிடங்களுக்குத் துடித்து கெண்டிருக்கும். துரத்தி வரும் எதிரி துண்டான வாலைப் பார்த்து அதிர்ந்து நிற்கும் கணப்பொழுதில் பல்லி தலை மறைவாகி விடும்.
இதற்கு Lizard tail autotomy என்று பெயர். இதில் இறைவனின் பங்கீட்டைப் பாருங்கள். துண்டாகிய வாலினால் பல்லி உயிர்த்தப்புகிறது, துரத்திவந்த எதிரி விலங்கின் சிரமத்திற்கு உணவும் கிடைக்கின்றது.
இதற்கு Lizard tail autotomy என்று பெயர். இதில் இறைவனின் பங்கீட்டைப் பாருங்கள். துண்டாகிய வாலினால் பல்லி உயிர்த்தப்புகிறது, துரத்திவந்த எதிரி விலங்கின் சிரமத்திற்கு உணவும் கிடைக்கின்றது.
தொடர்பாடற் திறன்
ஊர்வன ஜந்துக்களில் ஒலி எழுப்பும் சக்தி பல்லிகளுக்கு மட்டுமே இருக்கின்றது. பல்லி சொல்லும் என்பது இதன் ஒலியெழுப்பு தலைத் தான். மற்ற பல்லிகளுடன் தொடர்பு கொள்ள
இவை “கெக்… கெக்… கெக்… கெக்…” என்று ஒலியெழுப்பு கின்றன. மட்டுமன்றி உடல் சைகை களையும் மேற் கொள்கின்றன. தலையை உயர்த்திக் காட்டுதல், கழுத்தை இட, வலப் பங்களுக்கு அசைத்தல், உடலை சிலிர்த்தல்,
இவை “கெக்… கெக்… கெக்… கெக்…” என்று ஒலியெழுப்பு கின்றன. மட்டுமன்றி உடல் சைகை களையும் மேற் கொள்கின்றன. தலையை உயர்த்திக் காட்டுதல், கழுத்தை இட, வலப் பங்களுக்கு அசைத்தல், உடலை சிலிர்த்தல்,
வாலை சுழற்றுதல் என்பன தகவல் பறிமாற்றத் திற்காகக் கையாளும் உடலசைவு களாகும்.
தற்காப்புப் பொறிமுறை
சில பல்லிகள் தற்காப்புக்காக தங்கள் எச்சில், எச்சங்களை வெளியேற்றி துர்வாடையை எழுப்புகின்றன. இதைச் சற்றும் எதிர்பாராத அல்லது இந்த வாடையைத் தாங்க இயலாத எதிரி விலங்குகள் ஓடி விடுகின்றன.
இதனால் பல்லிகள் தப்பி விடுகின்றன. அதே போன்று மேலே கூறியது போல் வாலைத் துண்டித்துக் கொண்டும் தப்பித்து விடுகின்றன. மரப் பல்லி, இலை சரகுப் பல்லி இவற்றின் நிறமும், இவற்றின் உடல் மீது உள்ள வண்ணத் திட்டுகளின் நிறமும்
இவை வாழும் இடத்துடன் ஒத்திருப்பதால் இவை இருப்பதே இவற்றின் எதிரிகளின் கண்களுக்குத் தெரியாது.
எனவே இயற்கை யாகவே இவை பாதுகாப்புப் பெருகின்றன. இவ்வாறாக பல்லிகளுக்கு அல்லாஹ் பல்வேறு தற்காப்புப் பொறி முறைகளைக் கொடுத்துள்ளான்.
உணவு முறைமை
பூச்சிகளை இவை விரும்பி உண்கின்றன. எப்போதும் இரவு நேரங்களில் வீட்டில் எரியும் மின் குமிழ்களுக்கு அருகில் வரும் பூச்சிகளை யெல்லாம் லபக், லபக் என்று உண்டு விழுங்குவதைக் கண்டிருப்பிர்கள்.
நன்கு வளர்ந்த பல்லியானது ஒரு நாளைக்கு 50 கிராம் பூச்சிகளைக் கொன்று உண்ணும். சிறு எறும்புகள், ஈசல், பாச்சைப் புச்சி, கரப்பான் புச்சி, வெட்டுக் கிளி என்பன இவற்றின் அநேகமான உணவுகளாகும்.
நன்கு வளர்ந்த பல்லியானது ஒரு நாளைக்கு 50 கிராம் பூச்சிகளைக் கொன்று உண்ணும். சிறு எறும்புகள், ஈசல், பாச்சைப் புச்சி, கரப்பான் புச்சி, வெட்டுக் கிளி என்பன இவற்றின் அநேகமான உணவுகளாகும்.
இவ்வாறு புச்சிகளின் சனத்தொகையைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதில் பல்லிகளின் பங்கு முக்கியமானது. மட்டுமன்றி இனிப்புகளையும் விரும்பி உண்ணும். குடித்துவிட்டுவைத்த தேனீர் கோப்பை, எச்சில் பீங்கான் என்பவற்றிலும் இவை ருசி பார்க்கும்.
இனப்பெருக்கம்
இனப்பெருக்க காலங்களில் ஆண் பல்லி தேன் சிட்டின் ஒலியை ஒத்த கிரீச்சிடும் சப்தத்தை எழுப்பி தனக்கான துணையைத் தேடுகின்றது. வாலை முன்னும் பின்னும் சுழற்றி சங்கேதப் பாஷைகளைப் பரிமாறிக் கொள்ளும்.
இவ்வாறான செய்கைகள் மூலம் ஆண், பெண்ணை உறவுக்கு அழைக்கிறது. இனப்பெருக்கத் திற்காகத் தயாராகும் காலங்களில் இவை அதிக புரதச் சத்தை கொண்ட புழு, வெட்டுக்கிளி போன்ற சிறு உயிரிகளை உணவாக்கு கின்றன.
முதல் தடவை இனப்பெருக்கத்தில் இணையும் ஒரு பல்லி அதன் பின் தனக்கென ஒரு வாழிட எல்லைப் பகுதியை நிர்ணயித்துக் கொள்கின்றது. அத்தோடு தனது ஆட்சிக்குள் 4 அல்லது 5 பெண் பல்லிகளை யாவது சேர்த்துக் கொள்கின்றது.
தமது எல்லைக்குள் வேறு பல்லிகள் நுழைந்தால் கடுமையாக அதனுடன் சண்டை பிடிக்கும். சில போது இரண்டும் தொப் என்று தரையில் விழும் காட்சிகளையும் நீங்கள் கண்டிருப்பீர்கள்.
பெண் பல்லி கருத்தரித்த பின் அதன் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் உண்டாகும். அவை வயிற்றுக்குள் இருப்பது வெளியில் இருந்து பார்த்தால் கூட எமக்குத் தென்படும்.
அதன் தோல் மெலிதாக இருப்பது தான் இதற்குக் காரணம். ஓணான், முதலைகளைப் போன்று பல்லிகள் முட்டை இடுவதற்காக, எங்கும் குழி தோண்டி அவற்றை மூடி விடுவதில்லை. எங்கு சற்றே ஒதுக்குப்புறமாக இடம் கிடைக்கிறதோ அங்கு முட்டைகளை இட்டு விடும்.
உதாரணத்திற்கு புத்தக அலுமாரியில், உடை அலுமாரியில், உபயோகத்தில் இல்லாத அட்டை அல்லது மரப் பெட்டிக்குள், மின்சார மீடர் போர்டு அல்லது மெயின் ஸ்விட்ச் என எங்கும் அவை முட்டை யிடுகின்றன.
Thanks for Your Comments