அப்பல்லோ ஆஸ்பத்திரியை உல்லாச விடுதியாக்கி ரூ. 1 கோடிக்கு மேல் தின்று தீர்த்தது சசிகலா குடும்பம்தான், ஜெயலலிதா அல்ல என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.
ஆறுமுக சாமி கமிஷனிடம் அப்போலோ நிர்வாகம் ஜெயலலிதா சிகிச்சையின் போது சாப்பிட்ட தற்கான பில் தொகையை சில தினங் களுக்கு முன்பு சமர்ப்பித்தது.
இந்த பில் தொகையை பார்த்து இந்திய மக்களே அதிர்ச்சி அடைந்தார்கள்.
இது சம்பந்தமாக அதிமுக அவை தலைவர் மதுசூதனன் கருத்து சொல்லும் போது, "அப்பல்லோ வில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதா வின் உணவுக்கான செலவு ரூ.ஒன்றரை கோடி என்பது அபத்த மானது.
75 நாட்கள்
ஒன்றரை கோடி ரூபாய்க்கு அவர் உணவு சாப்பிடவில்லை. சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாப்பிட்டு இருப்பார்கள், ஜெயலலிதா அனுமதிக்கப் பட்டிருந்த 75 நாட்களும் நான் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றேன்.
நான் கட்சியின் அவைத் தலைவர். ஆனால் என்னையே ஒரு தடவை கூட ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவே இல்லை." என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.
சிவி சண்முகம் கருத்து
இப்போது இதே கருத்தை தான் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகமும் தெரிவித் துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.வி.சண்முகம் பரபரப்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
சசிகலா தான் காரணம்
ஜெயலலிதா உணவு பில் என அப்பல்லோ மருத்துவ மனை மீது கடுமையான குற்றச் சாட்டுக்களை அவர் வைத்துள்ளார்.
அதே போல, இந்த அளவுக்கு பில் வர முக்கியக் காரணமே சசிகலா குடும்பம் தான் என்றும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி யுள்ளார்.
இது குறித்து சி.வி.சண்முகம் கூறியுள்ள தாவது:
இட்லி, தோசை
"ஆஸ்பத்திரியை உல்லாச விடுதியாக்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் தான் .ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்கள் யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை.
சசிகலா குடும்பம் தான்
மருத்துவ மனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? மருத்துவ மனையை உல்லாச விடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் தான்.
சசிகலா தவிர அவரது குடும்பத் தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார்" என்று தெரிவித் துள்ளார்.
பகிரங்க கருத்து
சசிகலா குடும்பம் தான் ஒரு கோடிக்கு சாப்பிட் டிருக்கும் என்று மதுசூதனன் மறை முகமாகவும், மேலோட்ட மாகவும் கருத்து தெரிவித் திருந்தாலும்,
இன்று அமைச்சர் ஒருவரே சசிகலாவை நேரிடை யாகவும், பகிரங்க மாகவும் பெயரை சொல்லி குற்றஞ் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
சசிகலா மீது அமைச்சரே இப்படி புகார் சொல்லி விட்டதால், இதன் மூலம் ஆறுமுக சாமி ஆணையத்தின் தரப்பு, சசிகலா குடும்பத்திடம் விசாரணையை தீவிரப் படுத்தும் என எதிர் பார்க்கப் படுகிறது.
Thanks for Your Comments