பா.ஜனதா பேரணியில் போலீசார் தடியடி - திருவனந்தபுரத்தில் பரபரப்பு !

0
சபரிமலையில் 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும். போலீசாரின் கட்டுப் பாடுகளை தளர்த்த வேண்டும் 


உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பா.ஜனதா மாநில செயலாளர் கே.என். ராதா கிருஷ்ணன் திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன் தொடர் உண்ணா விரத போராட்டம் நடத்தி வருகிறார்.

8-ம் நாளான நேற்று மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தானம் உண்ணா விரத போராட்டம் நடத்தி வரும் கே.என். ராதா கிருஷ்ணனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 

இதையடுத்து அங்கு கூடி இருந்த 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதா, யுவமோர்ச்சா, மகிளா மோர்ச்சா தொண்டர்கள் பேரணி நடத்தினர்.
மூலநோயின் பற்றிய விளக்கமும், காரணமும்? 
பேரணி, தலைமை செயலக பிரதான வாசல் முன்பு வந்தடைந் ததும் பேரணியில்  வந்தவர்கள் திடீரென தலைமை செயலகத்து க்குள் நுழைய முயன்றனர். 

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது. 

தொடர்ந்து பா.ஜனதா தொண்டர்கள் போலீசார் மீது கற்கள், செருப்பு, கம்புகளை வீசி தாக்குதல் நடத்தினர். உடனே போலீசார் தொண்டர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். 

அப்படி இருந்தும் தொண்டர்கள் தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தியபடி இருந்தனர். கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டு களை வீசினர். 

தொடர்ந்து தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதில் மகிளா மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த 12 பேர் காயம் அடைந்தனர். 

அவர்கள் சிகிச்சைக் காக ஆஸ்பத்திரி யில் அனுமதிக் கப்பட்டு ள்ளனர். இதை யடுத்து பா.ஜனதா மாநில செயலாளர் சோபா சுரேந்திரன் தலைமையில் மகிளா மோர்ச்சா 


பெண்கள் 100-க்கும் மேற்பட்ட வர்கள் தலைமை செயலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது. 
அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதற்கிடையே தொடர் உண்ணா விரதம் இருந்து வரும் கே.என். ராதா கிருஷ்ணன் உடல்நிலை நேற்று மாலை மோச மடைந்தது. 

இதை யடுத்து அவர், ஆஸ்பத்திரி யில் அனுமதிக் கப்பட்டுள் ளார்.

பா.ஜனதா வினர் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் பா.ஜனதா வினர் இன்று (செவ்வாய்க் கிழமை) முழு அடைப்பு போராட்ட த்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings