வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னையில் சில இடங்களில் மழை பெய்கிறது.
மரக்காணம் கடல் பகுதி சீற்றமாக காணப் படுகிறது. இதனால், விழுப்புரம்
மாவட்ட த்தில் 19 மீனவ கிராம மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது.
இதற்கு பேய்ட்டி புயல் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை யில் இருந்து தென் கிழக்காக 310 கி.மீ., தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இதனை யடுத்து, மத்திய மேற்கு வங்க கடல், தென் மேற்கு வங்க கடற் பகுதிகளு க்கு
2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது.
மேலும், மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னை யில் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர் பகுதியில் கடல் கடுமை யான சீற்றத்துடன் காணப் படுகிறது
ஆந்திர கடற்கரையை காக்கி நாடாவிற்கும் மசூலிப் பட்டிணம் இடையே பேய்ட்டி புயல் கடக்கும் என்பதால்,
ஆந்திராவில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.
தேசிய மற்றும் போரிடர் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங் களை தாக்கி பெரும் சேதத்தை
ஏற்படுத்தி உள்ள நிலையில், புதிய புயல் உருவாகி ஆந்திராவை அச்சுறுத்தி வருகிறது.
Thanks for Your Comments