அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
ராஜஸ்தானில் உள்ள 199 தொகுதி களுக்கும் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதில் காங்கிரஸ் 101 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றி யுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி 6 இடங்களிலும், பாரதிய பழங்குடி கட்சி 2 இடங்களி லும்,
ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும்,
ராஷ்டிரிய லோக் தள ஒரு இடத்திலும், சுயேச்சை உறுப்பினர்கள் 12 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து முதல்வர் வசுந்தரா ராஜே தனது ராஜினாமா கடிதத்தை
நேற்று முன்தினம் மாலை கவர்னர் கல்யாண் சிங்கைச் சந்தித்து அளித்தார்.
காங்கிரஸ் சார்பில் புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டும். இரண்டு முறை முதல்வராக இருந்த
அசோக் கெலாட்டும், இளம் தலைவர் சச்சின் பைலட்டும் முதல்வர் பதவியில் அமர விரும்பு கின்றனர்.
இந்தநிலை யில் முதல்வரை தேர்ந்தெடுப்ப தற்காக ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒத்த கருத்து எட்டப்பட வில்லை.
மூத்த தலைவர்கள் பலர் கெலாட்டு க்கும், புதிய எம்.எல்.ஏ. க்கள் பலர் சச்சின்
பைலட்டு க்கும் ஆதரவு தெரிவித்த தால் முடிவு எடுக்க முடிய வில்லை.
பைலட்டு க்கும் ஆதரவு தெரிவித்த தால் முடிவு எடுக்க முடிய வில்லை.
இதை யடுத்து முதல்வர் யார் என்பதை கட்சித் தலைவர் ராகுல் காந்தி முடிவு
செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப் பட்டது.
Thanks for Your Comments