தாயின் கைகளில் மயங்கியபடியே இறந்த அழகிய இளம்பெண் !

0
ஸ்காட்லாந்தில் நண்பர்களுடன் இரவு விருந்துக்கு சென்ற இளம்பெண் தாயின் கைகளில் 
மயங்கிய படியே பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த 20 வயதான அமேய் லெட்டர், கடந்த 18ம் தேதியன்று இரவு நேர விருந்திற்கு சென்றுள்ளார்.
அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக, அவருடைய நண்பர்கள் அனைவரும் மீட்டு 

அருகாமையில் Dumbarton பகுதியிலுள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

மகள் சேர்ந்து கிடப்பதை பார்த்த அவருடைய தாய் கட்டியணைத் தவாறே கதறி அழ ஆரம்பித்துள்ளார். 

சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த பக்கத்துக்கு வீட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையில் அமேயின் தாயினுடைய காதலன் உடைந்த கையை வைத்துக் கொண்டும் காப்பற்ற தீவிர முயற்சி செய்தார்.

ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் அமேய் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், அமேய் இறந்ததற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்க வில்லை. 
பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என தெரிவித்தனர்

மேலும், ஊக்கமருந்து அதிகமாகி யிருந்தால் இறந்திருக்க வாய்ப்புண்டு எனவும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பக்கத்துக்கு வீட்டை சேர்ந்தவர்கள் கூறுகையில், அமேய் மிகவும் அழகான பெண். 

அவள் பழகும் விதம் அனைவரு க்குமே பிடிக்கும். மிகவும் நல்ல பெண். அவளுக்கு இப்படி ஒரு சோகம் நடக்கும் என நாங்கள் எதிர் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings