அதிகாலை விடியலின் போது வெள்ளிக் கோளினை நாம் பார்த்திருப் போம். நிலவுக்கு அருகினில் சற்றே பெரிய நடச்சத்திரம் போன்று காட்சி யளிக்கும். வெள்ளிக் கோள் முதன் முதலில் 14 – ஆம் நூற்றாண்டில் தான் கண்டு பிடிக்கப் பட்டது.
பூமியினை விட சிறியக் கோள் வெள்ளி. பல மில்லியன் ஆண்டுகளு க்கு முன்னால் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுந்த சூழ்நிலை வெள்ளியில் இருந்திருக்கிறது.
வெள்ளி யினைப் பற்றிய சுவாரஸ்ய மான தகவல்களைக் கீழே காணலாம்.
இரண்டாவது கோள்
சூரியக் குடும்பத்தில் சூரியனை வெள்ளி இரண்டாவ தாகச் சுற்றி வருகிறது.
ரோமானியர் களின் காதல் கடவுளான வீனஸின் பெயரே இக்கோளிற்குச் சூட்டப் பட்டது. மற்றைய கோள்களுக்கு எதிர் திசையில் வெள்ளி சூரியனை வலம் வருகிறது.
அறிந்து தெளிக !
வெள்ளி கிரகத்தில் மேற்கில் தான் சூரியன் உதிக்கும். கிழக்கில் மறையும். நீங்கள் வெள்ளிக் கிரகத்தில் நுழைகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
உங்களுக்கு முதல் பிரச்சனை அங்குள்ள வளிமண்டலம். விண்வெளியி லிருந்து வெள்ளியின் வளி மண்டலத்தில் நுழையும் போதே அடர் சல்பியூரிக் அமிலத்தில் மாட்டிக் கொள்வீர்கள்.
கந்தக அமிலத்தின் அடர்த்தி காரணமாக எல்லா பொருளும் எளிதில் கரைந்து விடும். அதிலும் தப்பித்தால் அடுத்த பிரச்சனை தரையினில் காத்துக் கொண்டிரு க்கும். வெள்ளியின் சராசரி வெப்பநிலை 462 டிகிரி !!
வெள்ளியில் ஒரு நாள்
பூமியினைப் போன்று வெள்ளி இல்லை என்பதைப் போன பத்தியிலேயே சொல்லி விட்டேன். வெள்ளியின் தற்சுழற்சி வேகம் மிகக் குறைவு.
சூரியனின் ஈர்ப்பு விசையினால் அதன் தற்சுழற்சி வேகம் குறைவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கி றார்கள். இதனால் வெள்ளி ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக்கொள்ள 243 நாட்கள் ஆகிறது.
பூமி தன்னைத் தானே சுற்றுவதால் தான் இரவு பகல் ஏற்படுகிறது என்பதை நான் சொல்ல வேண்டிய தில்லை தானே?. இப்போது இதனை வெள்ளியினோடு ஒப்பீடு செய்து பாருங்கள்.
ஆமாம் வெள்ளியில் ஒரு நாள் என்பது 243 நாட்கள். அதாவது வெள்ளி யில் ஒரு இரவும் பகலும் செல்வதற்கு 243 நாட்கள் ஆகும்.
ஆண்டு என்பது…
வருடத்திற்கு எத்தனை நாள் ? என்ன 365 நாட்களா? நீங்கள் வெள்ளியில் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்கள். பொதுவாக ஒரு வருடம் என்பது கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ள ஆகும் காலம்.
பூமி சூரியனைச் சுற்றுவதற்கு 365 நாட்கள் ஆகிறது. அது போல் வெள்ளி சூரியனைச் சுற்றி வர 225 நாட்களை எடுத்துக் கொள்ளும். மூளைக்குள் ஏதாவது தீப்பொறி பறக்கிறதா?
நீங்கள் அறிவாளி தான். வெள்ளியில் ஒருநாள் முடிவடைவதற்கு முன்பே ஓராண்டு முடிந்து விடும். புரிந்து கொள்ள இயலுகிறது தானே?
அதாவது இது பூமியில் நிகழும் பட்சத்தில் அதிகாலை குளிர் காலமும், மதியம் கோடை காலமாகவும், மாலை மழைக் காலமும், இரவு பனிக்கால மும் அடுத்தடுத்து வரும்.
அறிந்து தெளிக !
வெள்ளியின் வளி மண்டலத்தில் 50 – 80 கிலோ மீட்டர் வரை கந்தக அமிலமும், சல்பரும் உள்ளன. இதனால் சூரியக் கதிர்கள் வெள்ளியின் வளி மண்டத்தைத் தாண்டிச் செல்ல முடியாமல் போகிறது.
அதே போல் வெள்ளியின் பரப்பில் உள்ள ஒளி வெளியே தப்பிச்செல்ல முடிவதில்லை. இதைப் பசுமைக் குடில் விளைவு என்று அழைக்கி றார்கள்.
பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் வெள்ளியில் பெருங்கடல்கள் இருந்திருக் கின்றன. அதிகப் படியான வெப்பத்தினால் அவை ஆவியாகி விட்டதாக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவிக்கி றார்கள்.
Thanks for Your Comments