ராமாயணம் பற்றி எழுதிய இஸ்லாமிய எழுத்தாளருக்கு மிரட்டல் !

0
வால்மீகியின் ராமாயணம் பற்றி எழுதியதற் காக இந்து அடிப்படை வாதிகளி மிருந்து வந்த மிரட்டலை அடுத்து 


பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை எழுதுவதை நிறுத்த வேண்டியதா கிவிட்டது 

என கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய எழுத்தாளர் எம்.எம். பஷீர் தெரிவித் துள்ளார்.

புகழ் பெற்ற இலக்கிய விமர்சகரும் முன்னாள் பேராசிரி யருமான எம்.எம். பஷீர், 

வால்மீகியின் ராமாயண த்தை மையப் படுத்தி ராமரின் மனித பண்புகள் 

மற்றும் சீதையை தீக்குளிக்க சொல்லும் ராமர் மீதான வால்மீகியின் நுட்பமான விமர்சனம் பற்றிய தொடர் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.

ஒரு இஸ்லாமியர் என்பதால் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு உரிமை இல்லை என்று 

சில இந்து அடிப்படை வாதிகளிட மிருந்து வந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு களை 

அடுத்து, தொடர்ந்து எழுதுவதை நிறுத்தி யுள்ளதாக பஷீர் கூறியுள்ளார். 

சிறந்த ஆசிரியர், புகழ் பெற்ற இலக்கிய விமர்சகர் என பல பெருமை களையும், 


அடையாளங் களையும் கொண்ட தன்னை, சிலர் இஸ்லாமியன் என்று சுறுக்கி விட்டதாக ஆதங்கப் பட்டுள்ளார்.

மேலும் இது பற்றி அவர் கூறும் போது “என்னுடைய 75-வது வயதில், நான் ஒரு முஸ்லிமாக மட்டும் 

சுறுக்கப்பட்டு விட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை” என தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings