சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் !

1 minute read
0
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் குறித்து ஓய்வு பெற்ற 


நீதிபதி ஆறுமுக சாமி தலைமை யிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதா வின் செயலாளர்கள், 

உதவி யாளர்கள், பாதுகாவ லர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப் பட்டது.

இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, 

இளவரசி மகள் கிருஷ்ண பிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப் பட்டது. 

இதில் சிலரை ஆணையம் மீண்டும் வர வழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள 

சசிகலா விடம் விசாரணை நடத்த ஆறுமுக சாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.


சசிகலா விடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, அவர் அடைக்கப் பட்டுள்ள பெங்களூரு 

பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத் துக்கு ஆறுமுக சாமி ஆணையம் கடிதம் அனுப்பி யுள்ளது. 

விசாரணை தொடர்பாக தமிழக உள்துறை க்கும் ஆணையம் கடிதம் அனுப்பி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 16, April 2025
Privacy and cookie settings