அமெரிக்க அசுரனின் பலத்தின் காரணம் என்ன ?

0
அமெரிக்கா என்றவுடன் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது அதன் பிரம்மாண்டம். 
அமெரிக்க அசுரனின் பலத்தின் காரணம் என்ன ?
உல்லாசமான வாழ்க்கை, கைகளில் தாறுமாறாய் புரளும் டாலர், பிசியான மனிதர்கள், வலிமையான ராணுவம், உலகின் அதிக பணக்காரப் பெருந்தலைகள், ரஷியாவை 

அவ்வப்போது சீண்டும் வெள்ளை மாளிகை எனச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் எப்படி அமெரிக்கா மட்டும் இவ்வளவு புகழுடனும், சர்வ வல்லமை படைத்த நாடாக இருக்கிறது ? 

நம் நாட்டு இளைஞர் களுக்கு அமெரிக்காவில் வேலை என்பது ஆதர்சம். அமெரிக்காவின் பலத்திற்குக் காரணம் என்ன தெரியுமா? அதன் பணம்.

இரண்டாம் உலகப் போரும் அமெரிக்கா வும்

இரண்டாம் உலகப்போர் ஹிட்லரின் தலைக்குள் துப்பாக்கிக் குண்டு புகுந்த கனத்தில் முடிவிற்கு வந்தது. அதன் பின் யார் பெரிய ஆள் என்பதை நிரூபிக்கப் பல நாடுகளும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதித்தன. 

அமெரிக்கா தெளிவான திட்டத்தை முன் வைத்தது. உலகம் முழுவதும் நடைபெறும் வர்த்தக த்திற்கு டாலரையே பணமாகப் பயன் படுத்த பல நாடுகளும் ஒப்புக் கொண்டன. 
அமெரிக்கா வின் பணமான டாலரை உலகப் பணமாக அறிவித்தது பிரெட்டன் வூட் (Bretton Wood) மாநாடு. அன்று ஆரம்பித்த ஏற்றம் இன்று வரை தொடர்கிறது.

டாலர் என்னும் பூதம் முன்னணி வர்த்தகப் பொருள்களான கச்சா எண்ணெய், வாகனங்கள், உணவு, உலோகங்கள் ஆகிய வைகளின் ஏற்றுமதி டாலரில் தான் நடை பெறுகிறது. 

ஒவ்வொரு நாட்டிலும் ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு டாலரில் பணம் செலுத்த வேண்டுமானால் அந்தந்த நாடுகளில் உள்ள தலைமை வங்கிகளில் உள்நாட்டுப் பணத்தினைக் 
கொடுத்து அதற்கு ஏற்ற டாலரைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் டாலரை வர்த்தகத் திற்குப் பயன் படுத்தும் எல்லா நாடுகளு க்கும் அமெரிக்கா வில் கணிசமான அளவு முதலீடு இருக்கும். 

இந்த முதலீடு அமெரிக்காவின் பெரும்பலம்.
அறிந்து தெளிக !
அமெரிக்கா வில் அதிகளவில் முதலீடு செய்த நாடு ஜப்பான். சுமார் 373 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. 
அதற்கடுத்ததாக நெதர்லாந்து 305 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
டாலர் மதிப்பு

உலகம் முழுவதும் பெரும் பான்மையான நாடுகள் டாலரை வர்த்தகத்திற்குப் பயன் படுத்துவதால் ஒரு நாட்டினுடைய பண மதிப்பு டாலருடன் ஒப்பிட்டுச் சொல்லப் படுகிறது. 

டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு என்று சொல்வது அதைத் தான். பல காரணங்களால் பணத்தின் மதிப்பு குறையலாம். அளவுக்கு அதிகமான பணப்புழக்கம், 
அமெரிக்க அசுரனின் பலத்தின் காரணம் என்ன ?
கட்டுப் படுத்த முடியாத பணவீக்கம் போன்றவை பணமதிப்பை வெகுவாகக் குறைத்து விடும். கென்யா, வெனிசுலா போன்ற நாடுகள் பெரும் பிரச்சனை களைச் சந்தித்தது இதனால் தான். 

டாலரின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க எல்லா நாடுகளும் கடும் பொருளாதார வீழ்ச்சியினை சந்திக்க நேரிடும்.

அறிந்து தெளிக !!
அமெரிக்காவின் வெளியே புழக்கத்தில் உள்ள டாலர் மட்டும் 580 பில்லியன் டாலர். 
அதாவது உலக வர்த்தகத்தில் 65% பணப்பரி மாற்றம் டாலரில் நடை பெறுகிறது. 
இரண்டாம் இடத்தில் யூரோ இருக்கிறது. 11.9% பணப்பரி மாற்றத்தை யூரோ கொண் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings