முதல் பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு - எங்குள்ளது தெரியுமா?

0
13000 வருடங் களுக்கு முன்பே பீர்களைத் தயாரித்த தொழிற்சாலை.பீர் என்றவுடன் பலருக்கு முகம் சட்டெனெ மலர்ந்து விடுகிறது. 


புதிய புதிய பெயர்களில் இன்று நாம் பார்க்கும் பீர்கள் எல்லா வற்றுக்கும் தாயகம் சுமேரியா தான். 

அன்று தொடங்கி பல ஆண்டு களாய் குடி மகன்களின் வயிற்றில் பீர் வார்க்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது.

இஸ்ரேல் நாட்டி லிருக்கும் குகை ஒன்றில் பழங்கால த்தில் பீர் தயாரித் ததற்கான சான்று கிடைத்துள்ள தாக 

ஸ்டான் ஃபோர்டு பல்கலைக் கழகத்தைச் (Stanford University) சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் அறிவித் துள்ளனர். 

உலகின் முதல் பீர் தொழிற்சாலை இது தானாம். சுமார் 13,000 வருடங் களுக்கு 
முன்னால் பீர் தயாரிக்கும் பணி இங்கு நடந்ததற் கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இதையும் படிங்க..
பீர் கடவுள் !!

நீங்கள் படித்தது உண்மை தான். சுமேரியர்கள் பீர்களுக் கென்று தனியாகக் கடவுளையே வழிபட்டிருக் கின்றனர். 

பெண் கடவுளான நின்காசிக்குப் (Ninkasi) பீர்களைப் படைத்து வழி பாடெல்லாம் நடத்தி யிருக்கி றார்கள் அந்த ஊர் குடிமகன்கள். 

அதன் பின்னால் வந்த பாபிலோனிய சாம்ராஜ் யத்திலும் பீரின் பெருமை நுரைத்துப் பொங்கியது.


அறிந்து தெளிக !!

பாபி லோனியர் களின் காலத்தில் 20 வகையான பீர்கள் தயாரிக்கப் பட்டதாம் !!

அப்படிப் பரவியதுதான் இஸ்ரேல் வரையிலும் வந்து சேர்ந்தி ருக்கிறது 
பீர். திருவிழாக்கள், திருமணம் என அம்மக்கள் பீரைக் குடித்து காலி செய்திருக் கிறார்கள். 

புட்டிகள் காலியான வேகத்தில் பீரினைத் தயாரிக்க முடியாமல் போகவே, புதிய தயாரிக்கும் முறை களைத் தீவிரமாகத் தேடி யுள்ளனர்.

விவசாயமே காரணம் !!

ஸ்டான் ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் தலைமை ஆராய்ச்சி யாளர் லீ லியு (Li Liu)

பழைய ஜோர்டானில் விளைச்சல் அமோக மாக இருந்த தாகக் குறிப்பிட் டுள்ளார். 

அளவுக் கதிகமான தானிய விளைச்சல் பீர் உற்பத்தியைப் பெருக்கிய தாகத் தெரிவித் துள்ளார்.

அறிந்து தெளிக !!

ஒரு வருடத்திற்கு அதிக மாக பீர் குடிக்கும் நாட்டவர்கள் செக் குடியரசு மக்கள் தான். 

ஒரு நபர் சராசரியாக 142 லிட்டர் பீர் குடிக்கி றார்களாம் அங்கே !!.

பார்லி, கோதுமை, ஓட்ஸ் ஆகியவை பீர் தயாரித்த லில் முக்கியப் பங்காற்றி யுள்ளன. 
நுரைப்பதற் காக பிரெட்டைப் பயன் படுத்தி யுள்ளனர். 

பீர் தயாரிப்ப தற்காக இவர்கள் முதலில் தானியங் களைத் தண்ணீரில் ஊற வைப்பார்கள். 


பின்னர் வெளியே எடுத்து தானியங்கள் முளை கட்டும் வரை காத்திருப் பார்கள். 

அதன் பின் அதனை எடுத்து அரைத்து மாவாக்கு வார்கள். கடைசியாக ஈஸ்ட்டு களுக்காக 

பிரெட் சேர்க்கப் பட்டு காய்ச்சப் பட்டு வடி கட்டப்படும். 

அப்பற மென்ன, பீர் தயார். கொண்டாட வேண்டியது தான்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings