சூதாட்ட மன்னரின் கண்டுபிடிப்பு சாண்ட்விச் !

0
உலகம் முழுவதும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணும் உணவு களில் சாண்ட்விச் முதலிடத்தில் உள்ளது. 


இரண்டு பிரெட் துண்டு களுக்கிடையே இறைச்சியை வைத்து உண்ணும் உணவான சாண்ட்விச் 

முதன் முதலில் உருவாக்கப் பட்டது இங்கிலாந்தில் சாண்ட்விச்சில் தான். 

சாண்ட்விச் நகரத்தில் உருவாக்கப் பட்டதால் அந்தப் பெயரே உணவிற்கும் வைக்கப் பட்டது. 
சாண்ட்விச் உருவாகக் காரண மாக இருந்தவர் அந்நகரத்தின் பிரபுவான ஜான் மாண்டேகு (John Montagu). ஆள் சூதாட்டத்தில் மன்னர். 

படுபயங்கர சோம்பேறி என்கிறார்கள் மாண்டேகு வின் வரலாற்றைத் தொகுத்த வர்கள்.

சோம்பேறி பிரபு

மாண்டேகு சூதாட ஆரம்பித்தால் இடி விழுந்தாலும் அவர்தலை அசையாது. காரியத்தில் கண்ணானவர். 

ஊரை ஒரு ரவுண்ட் சுற்றி விட்டு வீட்டிற்கு வருவார். வந்ததும் ஒரு ரவுண்ட். அடுத்து சூதாடக் கிளம்பி விடுவார். 

இந்த ரவுண்டுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இப்படி ஒருநாள் வீட்டில் பின்புறம் 

சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாண்டேகுவை அவருடைய சமையல் காரர் 

மத்திய உணவிற் காக அழைக்கப் போக கிளம்பியது கோபம். தீட்டி விட்டார் தீட்டி. 


“முக்கிய வேலையில்” ஈடுபடும் போது தொந்தரவு செய்தால் யாருக்குத் தான் கோபம் வராது? 

அவரிருக்கும் இடத்திற்கே உணவைக் கொண்டு வர உத்தர விட்டார்.

அந்தப் பெயர் தெரியாத சமையற் காரர் பிரட்டுகளு க்கு இடையே மாட்டுக் கறியை 

வைத்து கொண்டு போய் கொடுக்க மாண்டேகுவின் மண்டை சுவையி னால் கிறுகிறுத்தது. 
அதற்கு அரை மணி நேரம் கழித்து ஜான் மாண்டேகு தான் முதலில் சாண்ட்விச்சை உண்டவர் என்று குறித்துக் கொண்டது வரலாறு. 

மதிப்பான பட்டம். பாக்கெட் முழுவதும் பணம். வரலாற்றுப் புத்தகத்தைப் புரட்டினால் ஆட்சி யாளர்கள் பாதிப்பேர் இப்படித் தான். 

நமக்கு எதற்கு வம்பு? நாம் சாண்ட் விச்சைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம் வாங்க.


வியாபாரப் புரட்சி

மாண்டேகு வின் காலமான 1772 ற்குப் பின்னர் சாண்ட்விச் நகரத்தைச் சுற்றி சாண்ட்விச் விற்பனைக்கு வந்தது. 

எளிதில் எடுத்துச்செல்ல முடியும். அதை விட எளிமையாக சாப்பிட்டு விட முடியும். விலையும் கொசுறு தான். 

கொஞ்ச நாட்களில் ஒட்டுமொத்த பிரிட்டனும் சாண்ட்விச்சை அசைபோடத் துவங்கி விட்டது. 

அமெரிக்க ஆசாமிகள் பார்த்து விட்டு சும்மா இருப்பார்களா?

அப்படி இருந்தால் அவர்கள் அமெரிக்கர் களா? சாண்ட்விச் அமெரிக்கா விற்குப் பயணமானது. 
இன்றைக்கும் அமெரிக்கா வின் உணவுப் பொருட்களில் சாண்ட்விச் தனித்துவ மான இடத்தினைப் பெற்றிருக்கிறது. 

சொன்னால் நம்ப மாட்டீர்கள் அமெரிக்கர் கள் ஒரு நாளைக்கு 300 மில்லியன் சாண்ட் விச்சுகளை உண்கிறார்கள்.

சாண்ட்விச் தினம் !
அமெரிக்கர் களுக்கும் சாண்ட்விச் சிற்கும் ஏகப்பட்ட பாசம் உண்டு. 
ஏனெனில் அதற்கென ஒரு நாளையே ஒதுக்கி கொண்டாடு கிறார்கள் அமெரிக்கர்கள். 
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 3 – ஆம் தேதி சாண்ட்விச் தினம் அமெரிக்கா வில் கொண்டாடப் படுகிறது.
உலகத்தின் மிகப்பெரிய சாண்ட்விச் தயாரித் ததும் அவர்கள் தான். 


மிச்சிகன் மாநிலத்தில் 2005 – ஆம் ஆண்டு 2467.5 கிலோ அளவுள்ள சாண்ட்விச் தயாரிக்கப் பட்டது. 12 அடி அகலம். 12 அடி நீளம் !!!

நீங்கள் தான் தயாரிப்பீர் களா? நாங்கள் செய்ய மாட்டோமா? எனப்பொங்கி விட்டார்கள் லெபனான் நாட்டுக் காரர்கள். 
உடனே உலகத்தின் நீளமான சாண்ட்விச்சை தயாரிக்கத் தொடங்கி விட்டனர். 

தயாரானது 2411 அடி சாண்ட்விச். இன்று வரை அந்த சாதனை முறியடிக்கப் படவில்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings