அ.தி.மு.க -வுக்கு அதிர்ச்சி கொடுத்த அ.ம.மு.க !

0
ஜெயலலிதா சமாதியில் தினகரனுக் காகக் கூடிய கூட்டம் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. 


`எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விசுவாசிகள் தினகரன் பக்கம் செல்வதாக இதை எடுத்துக் கொள்ளலாம். 

சமாதியில் கூடிய கூட்டத்தை ஸ்டாலினும் கவனித் திருக்கிறார்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.

தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 

இன்று காலை வாலஜா சாலையி லிருந்து ஜெயலலிதா சமாதி வரையில் அமைதிப் பேரணியை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. 

இந்தப் பேரணியில் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, 

முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கறுப்புச் சட்டை அணிந்து சோகமாகக் காட்சி யளித்தார் எடப்பாடி பழனிசாமி. இதே இடத்தி லிருந்து தினகரனும் அமைதிப் பேரணியைத் தொடங்கினார். 


ஆளும் கட்சிக்குக் கூடிய கூட்டத்தை விட தினகரனுக் காக வந்து சேர்ந்த கூட்டம், அமைச்சர் களுக்குக் கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது. 

இந்தக் கூட்டத்தைக் கண்ட தி.மு.க நிர்வாகி களும் ஸ்டாலின் கவனத்து க்குக் கொண்டு சென்றுள்ளனர்.

தினகரன்

இது தொடர்பாக அறிவாலய த்தில் பேசிய தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர், `தினகரன் எப்படியும் களத்தில் நிற்பார். 

அவர் களத்தில் நிற்பதன் மூலமாக அ.தி.மு.க-வின் வாக்குவங்கி பிளவுபடும். 

இனி எடப்பாடி பழனி சாமியைக் காட்டி யாரும் தி.மு.க-வை மிரட்டிவிட முடியாது. 

சிறிய கட்சிகளு க்குத் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை விட்டால் வேறு வழியில்லை. 

இவர்களில் சிலர் எடப்பாடி பழனிசாமியைக் காரணம் காட்டி எங்களை மிரட்டு கின்றனர். 

அதில் சிலர், எடப்பாடி பழனி சாமியை அடிக்கடி சந்திக்கின்றனர். தமிழக அரசையும் மறை முகமாகப் பாராட்டுகி றார்கள். 

வரக்கூடிய தேர்தலில் தினகரனு க்குப் பத்து சதவிகித வாக்குகள் கிடைக்க லாம் என்ற பேச்சும் உள்ளது. 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அபிமானிகள் தினகரன் பக்கம் செல்லவே விரும்பு கின்றனர். 

எனவே, மெரினாவில் தினகரனுக் காகக் கூடிய கூட்டம், எங்களுக்கு ஒரு வகையில் சாதகமானது தான். 


அ.தி.மு.கவின் வாக்கு வங்கி பிளவுபடும் போது தி.மு.க வுக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம்" எனப் பேசி யிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

`கூட்டத்தைத் திரட்ட மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கை என்ன?" என அ.ம.மு.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். 
`இதற்கென எந்தத் திட்டமும் வகுக்கப்பட வில்லை. `சமாதிக்கு வாருங்கள்' என அறிக்கை மட்டுமே வெளியிட்டார் தினகரன். 

தே.மு.தி.க தொடங்கிய காலத்தில் விஜயகாந்த் தன் சொந்தக் காசை செலவழித்த தால், எங்கே கூட்டம் நடந்தாலும் பெரும் கூட்டம் ஒன்று தேடி வந்தது. 

அதே போல் தான், இப்போது தினகரனுக்கும் கூட்டம் கூடுகிறது. புதிய மாற்றுக் கான உணர்வாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது. 

தினகரனு க்குக் கூட்டம் வந்தால், எடப்பாடி பழனிசாமிக்கு ஆபத்து எனச் சிலர் பேசுவதை யெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தில்லை. 

இப்படித் தான் ஆர்.கே .நகரையும் கவனித்தார் ஸ்டாலின். கடைசியில் டெபாசிட்டைப் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருக்கும் வரையிலும் இறக்கும் தருவாயிலும் ஏன் அம்மா தினகரனை சேர்த்துக் கொள்ள வில்லை ? 

இந்த கேள்விக் கான பதிலை உண்மையான அம்மா விசுவாசிகள் யோசிக்க வேண்டும்... காரணமின்றி அவர் அப்படி ஒரு முடிவை எடுத்திருப்பா...


ஸ்டாலின்

ஜெயலலிதா இறந்த பிறகு வேறு எந்தக் கட்சிக்கும் சாரை சாரையாக அ.தி.மு.க தொண்டர்கள் இடம் பெயர்ந்த தாகத் தகவல் இல்லை. 

ஆட்சி மாறினால் காட்சி மாறும். அப்போது வேண்டு மானால், கட்சி நிர்வாகிகள் மாறுவதற் கான வாய்ப்பு இருக்கிறது. 

இந்தக் கூட்டம் உணர்த்துவது ஒன்றைத் தான். 

டெல்லி பாட்டியாலா நீதிமன்ற த்தில் இரட்டை இலைக்கு லஞ்சம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் நேற்று குற்றப் பத்திரிகையைப் பெற்றுக் கொண்டார் தினகரன். 


இந்த வழக்கில் அவர் சிறைக்குச் செல்வார்; அ.ம.மு.க காணாமல் போய்விடும் என்றெல்லாம் பேசி வந்தனர். 

இன்றைக்குக் கூடிய கூட்டத்தின் மூலம் அந்தப் பிரசாரம் முறியடிக்கப் பட்டிருக் கிறது" என்றார் விரிவாக.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings