தாமிரம் ஏன்? எதற்கு? எவ்வளவு?

0
மிகக் குறைந்த அளவில் தேவைப்படும் தாது உப்புக்களுள் ஒன்று தாமிரம். 
ஆனால், ரத்தச் சிவப்பணு உற்பத்தி முதல் சீரான இதயத் துடிப்பு வரை இதன் பயன் மிகப் பெரியது.

எவ்வளவு தேவை?

பெரியவர் களுக்கு, ஒரு நாளைக்கு 900 மைக்ரோ கிராம் என்ற அளவில் தாமிரம் தேவை. 

மரபியல் குறைபாடு, அதிக அளவில் துத்தநாகம் உள்ள உணவை உண்பது, 

வைட்டமின் சி சப்ளிமென்ட் எடுத்துக் கொள்வது போன்ற காரணங் களால் தாமிர தாதுஉப்புக் குறைபாடு ஏற்படலாம்.

எவற்றில் உள்ளது?

விலங்குகளின் கல்லீரல், இறைச்சி, கடல் உணவு, முழு தானியங்கள், சோயா, 

பாதாம், அவகேடோ, பார்லி, பூண்டு உள்ளிட்ட வற்றில் இருந்து கிடைக்கிறது.

ஏன் அவசியம்?

முதுமையைத் தாமதப் படுத்துகிறது: தாமிரம் ஒரு மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். 
பார்வையைப் பறிக்கும் நீரிழிவு !
இது ஃப்ரீராடிக்கல்ஸ் பாதிப்பில் இருந்து சருமத்தைக் காக்கிறது. 

கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதன் மூலம் கரு வளையம், சுருக்கம் போன்ற வற்றைத் தவிர்க்க உதவுகிறது.

இரும்புச் சத்தை கிரகிக்க: சிறுகுடலில் இருந்து இரும்புச் சத்தை கிரகிக்கவும், 

அதன் மூலம் ரத்தச் சிவப்பணு உற்பத்திக்கும் உதவுகிறது. 

இதனால் தான் ரத்தச் சோகை ஏற்பட்டவர் களுக்குத் தாமிர அளவுப் பரிசோதனை யும் மேற்கொள்ளப் படுகிறது.

உடல் திசுக்களின் குளூக்கோஸ் பயன் பாட்டைத் தூண்டுகிறது. 

ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு உதவுவதன் மூலம், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம் படுத்துகிறது. 

ஆஸ்டியோ பொரோசிஸ் வாய்ப்பைத் தடுக்கிறது. கெட்ட கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.

மூளையைத் தூண்டுகிறது: 

மூளையை ஆரோக்கிய மாகவும் துடிப்புட னும் வைத்திருக்க உதவுகிறது. 

புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்க உதவுகிறது. 

கர்ப்பிணிகள் போதுமான அளவு தாமிரச்சத்து எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

போதுமான அளவு கிடைக்கா விட்டால்...

தாமிரம் அதிக அளவு இருந்தாலும் சரி, போதுமான அளவில் இல்லை என்றாலும் சரி...  மூளை செல்கள் பாதிக்கப்படும். 

அதிக அளவில் தாமிரம் கிடைத்தால், வில்சன்ஸ் என்ற நோய் ஏற்படும். 
வெயில் கால தலைவலிக்கு காரணங்கள்
அதாவது, கல்லீரல், மூளை மற்றும் முக்கிய உறுப்புக் களில் தாமிரம் படியும். 

மூளையில் அளவுக்கு அதிகமாகத் தாமிரம் பபடிவதால் கூட அல்ஸைமர் ஏற்படலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings