அசாம் மாநிலத்தில் மிகப்பெரிய ஈரடுக்கு பாலம் !

0
அசாம் மாநிலத்தில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய ரயில் மற்றும் சாலை போக்கு வரத்துக்கான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார்.


அசாம் மாநிலம் திப்ரூகர் மற்றும் தேமஜி மாவட்டங்களை இணைக்கும் விதத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் கட்ட 1997 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா அடிக்கல் நாட்டினார். 

எனினும் 2002 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்தான் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. பிரம்ம புத்திரா நதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்கால் கட்டுமானப் பணிகள் நிறை வடைவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படு கிறது.

அருணாச்சலப் பிரதேச எல்லையை ஒட்டி 3200 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட திட்ட மிடப்பட்ட பாலம் 5900 கோடி ரூபாய் செலவில் ரயில் மற்றும் சாலை போக்கு வரத்துக்காக ஈரடுக்கு பாலமாக தற்போது கட்டி முடிக்கப் பட்டுள்ளது. 

போகிபீல் எனப்படும் அந்த பாலத்தை வாஜ்பாய் பிறந்த நாளான இன்று பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பின்னர் பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்ற பிரதமர், அருகில் இருந்த மக்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார். பாலத்தில் காரில் சென்றும் பிரதமர் பார்வை யிட்டார்.

சீன எல்லை அருகே அமைந்துள்ள தால் பாதுகாப்பு காரணங் களுக்காக ராணுவ டேங்குகள் சென்றாலும், போர் விமானங்கள் தரையிறங் கினாலும் தாங்கும் வல்லமை யுடன் இந்த பாலம் கட்டப் பட்டுள்ளது. 

இந்த பாலத்தால் 170 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப் படும். பயண நேரமும் 4 மணி நேரம் குறையும். பாலத்தின் அடியில் இருவழி ரயில் பாதையும், பாலத்தில் மூன்று வழி சாலை பாதையும் அமைக்கப் பட்டுள்ளது.


இந்தியாவிலே மிக நீளமான ஈரடுக்குப் பாலமான இது,ஆசிய அளவில் இரண்டாவது பெரிய பாலமாகும். இதன் மூலம் டெல்லி - திப்ரூகர் இடையிலான ரயில் பயண நேரம் முன்று மணி நேரம் குறையும். 

பராமரிப்பு செலவை குறைக்கும் விதத்தில் ஐரோப்பிய தொழில் நுட்பத்தில் முழுவதும் வெல்டிங் முறையில் போகிபீல் பாலம் கட்டப் பட்டுள்ளது.

போகி பீல் ஈரடுக்கு பாலத்தில் பிரதமர் நரேந்திரமோடி முதல் ரயிலை கொடி யசைத்து தொடங்கி வைத்தார். டின்சுகியா - நாகர்லாகுன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்திற்கு 5 நாள் அந்த வழித்தடத்தில் இயக்கப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings