இருமுடி கட்ட அர்ச்சகர் மறுப்பு - தாங்களே கட்டிக் கொண்ட சென்ற பெண்கள் !

0
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து பெண்களும் செல்ல
அனுமதி வழங்கி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்ட போது சில பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.

ஆனால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதன் காரணமாக பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.


இந்நிலையில் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், சபரிமலைக்கு சென்ற சென்னையை சேர்ந்த 11 பெண்களை கேரள போலீசார் பம்பையில் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னையி லிருந்து சபரிமலை சென்ற 11 பெண்கள் பம்பை அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பம்பை விநாயகர் கோவிலில் பெண்களுக்கு இருமுடி கட்ட அர்ச்சகர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்கள் தாங்களே இருமுடி கட்டிக் கொண்டு காலை 5.30 மணிக்கு சபரிமலை நோக்கி நடைபயணம் மேற்கொண் டுள்ளனர்.

11 பெண்களில் 9 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து 11 பெண்களும் ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப் பட்டனர்.

அப்போது, அந்த பெண்கள் நாங்கள் சபரிமலை செல்வதற்கு வழி விடுங்கள் என்றும், விரைவில் நங்கள் திரும்பி விடுவதாகவும் கூறினர்.
மேலும், அந்த 11 பெண்களும் சபரிமலை செல்ல ஏற்கெனவே பாதுகாப்பு கோரி, கேரள முதல்வருக்கு கடிதம் அனுப்பி யுள்ளதாக கூறினர்.

இதனை யடுத்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings