அம்மா உணவக ஊழியரிடம் வழிப்பறி - ஊழியர்களின் சம்பளப் பணம் பறிபோனது !

0
சூளை மேட்டில் அம்மா உணவக ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ஊழியர் களின் ஒருமாத சம்பளப் பணத்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றனர்.


சூளைமேடு அருணாச்சலம் தெருவில் வசிப்பவர் கீதா (35). (பெயர் மாற்றப் பட்டுள்ளது). 

இவர் சூளைமேடு நமச்சிவாய புரத்தில் உள்ள அம்மா உணவக த்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். 

இதில் பத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்று கின்றனர். 

இவர்களுக்கு மாதா மாதம் சம்பளப் பணம் சூளைமேடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போடப்படும்.

மொத்தமாக கீதாவின் அக்கவுண் ட்டில் போடப்படும் பணத்தை எடுத்து மற்ற ஊழியர் களுக்கு சம்பளமாகப் பிரித்துக் கொடுக் கப்படும். 

வழக்கம் போல் கடந்த மாதத்துக் கான சம்பளப் பணம் வங்கியில் போடப் பட்டது. 

அதை கீதா எடுக்கச் சென்றார். பணம் ரூ. 85,800- ஐ எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்த கீதா, 

அதை தனது இரு சக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்தார்.

பின்னர் அம்மா உணவகத் துக்குப் புறப்பட்டார். அப்போது அவரது முதுகில் எதுவோ விழுந்தது போல் இருந்தது. 

இதனால் அவரது முதுகுப் பகுதியில் கடுமை யான எரிச்சல் ஏற்பட்டுள்ளது. 

அரிப்பு தாங்க முடியாத தால் என்ன செய்வது என்று தெரியாமல் நேராக தனது வீட்டுக்கு வந்தவர் 

வண்டியை ஓரம் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்று குளித்து உடை மாற்றி யுள்ளார்.


அதன் பின்னர் அவரது முதுகில் ஏற்பட்ட அரிப்பு நின்றுள்ளது. 

பின்னர் அம்மா உணவகத் துக்குச் செல்வதற் காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்துள்ளார். 

அப்போது அவருக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. 

இரு சக்கர வாகனத்தின் சீட்டை உடைத்து பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.

உடனடியாக அவர் அக்கம் பக்கமிருந்த வர்களை இங்கு யாராவது என் 

வண்டியில் உள்ள சீட்டை திறப்பதைப் பார்த்தீர்களா என்று கேட்டுள்ளார். 

அதற்கு அருகிலிருந் தவர்கள் மூன்று நபர்கள் உங்கள் வாகனம் அருகே நின்று கொண்டிருந் ததைப் பார்த்தோம் என்று கூறி யுள்ளனர்.

உடனடியாக இது குறித்து கீதா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரை அடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

கீதா பணம் எடுத்த இடத்தில் அவரைப் பின் தொடர்ந்த மர்ம நபர்கள் 


அவர் உடலில் அரிப்பு ஏற்படுத்தும் ரசாயனப் பவுடரைத் தூவி விட்டுள்ளனர்.

அரிப்பு தாங்காமல் பெண் என்பதால் உடைகளைக் களைவதிலும் உள்ள சிக்கல் காரணமாக கீதா அவரது வீட்டுக்குச் செல்ல, 

அந்த நேரம் அவரைப் பின் தொடர்ந்து வந்தவர்கள் இரு சக்கர வாகனத்தின் 

சீட்டைத் திறந்து சம்பளப் பணத்தை எடுத்துச் சென்றி ருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

அதே போன்று பணத்தைக் கையாளும் நபர்கள் சில நேரம் பணத் தேவைக்காக 

எடுத்து வைத்துக் கொண்டு திருடப் பட்டதாக நாடகமாடு வார்கள். 

அப்படியும் நடக்கலாம் என்ற கோணத்தி லும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீதாவின் வீட்டருகில் பணம் திருடப் பட்டதாகக் கூறும் இடத்தில் சிசிடிவி கேமரா இல்லை. 

ஆனால் வங்கிக்குள், வங்கிக்கு வெளியே கீதாவை யாராவது பின் தொடர்ந் தார்களா? 

என அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் சேகரித் துள்ளனர்.


அம்மா உணவகம் மாநகராட்சி மூலம் பராமரிக்கப் படுகிறது. 

அனைத்து விவகாரங் களும் ஆன் லைனில் இன்று நடக்கும் போது 10 க்கும் மேற்பட்ட 

ஊழியர் களின் சம்பளப் பணத்தை அவரவரது வங்கிக் கணக்கில் தனியாகப் போடாமல் 

இது போன்று ஒருவர் கணக்கில் வரவு வைத்து, அதை அவர் பாதுகாப்பற்ற முறையில் எடுத்து வரும் 

முறையை இன்னும் சென்னை மாநகராட்சி ஏன் மாற்றாமல் உள்ளது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings