கடந்த மே மாதம் தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி
நடந்த பேரணியில் கலவரம் வெடித்து, போலீசார் நடத்திய துப்பாக்கி சொத்தில் 15 பேர் படுகொலை செய்யப் பட்டனர்.
பின் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசாணை வெளியிட்டு, ஸ்டெர்லை ஆலையை மூடி சீல் வைத்தது.
இதனை எதிர்த்து வேதாந்த குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிந்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதற்கு தமிழக அரசும், தமிழக மக்களும், அனைத்து கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நேற்று முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியர் அவர்களிடம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்று மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த
பாத்திமா பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், ”ஜனவரி மாதம் 21-ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்.
அதுவரை ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது” என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் தலைமை செயலாளர், வேதாந்தா நிறுவன குழும இயக்குநர்
ஆகியோர் ஜனவரி 21-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Thanks for Your Comments