மேட்டூர் அணை நீர்த்தேக்க த்தில் ரசாயனக் கழிவுகள் மிதந்து சுற்றுச் சூழல் பாதிக்கப் பட்டு
துர்நாற்றம் வீசுவதால் அணையைச் சுற்றியுள்ள பொது மக்கள் அச்சம் அடைந்துள் ளார்கள்.
இந்த நீரை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு க்குக் கொண்டு சென்று பல நாள்கள் ஆகியும்
இன்னும் ரிசல்ட் அறிவிக்காமல் இருப்பது பொது மக்களிடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இதுபற்றி மேட்டூரை சேர்ந்த சமூக ஆர்வலர் களிடம் கேட்ட போது, ``சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 120 அடியாகும்.
இதன் மொத்த கொள்ளளவு 93.47 டி.எம்.சி., இதன் நீர்த்தேக்க பரப்பளவு 60 சதுர மைல்கள் ஆகும்.
தற்போது அணையின் நீர்மட்டம் 103.11 அடியாகும். நீர் இருப்பு 68.93டி.எம்.சி- யாக உள்ளது.
இந்நிலை யில் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான 16 கண் மதகு பகுதியில்
ரசாயன கழிவுகள் கலந்து நீர் பச்சை நிறத்தில் எண்ணெய் பசையுடன் மிதந்து துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் மேட்டூர் அணையைச் சுற்றி யுள்ள சேலம் கேம்ப், தங்கமாபுரி பட்டிணம் மற்றும்
அணையின் நீர்பிடிப்பு பகுதியான கோவிந்தப் பாடி, கோட்டையூர், பண்ணவாடி,
மாசிலா பாளையம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடியிருக்க முடியாமல் அவதிப்படு கிறார்கள்.
மேட்டூர் அணையைச் பார்வையிட வரும் சுற்றுலா பயணி களும் நீர்த்தேக்க த்தைப் பார்த்து மூக்கைப் பிடித்துக் கொண்டு திரும்பு கிறார்கள்.
இதனால் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிப்பத ற்கும், குளிப்பதற்கும் பொதுமக்கள் அஞ்சு கிறார்கள்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக வரும் போது கர்நாடகா விலிருந்து
ரசாயனக் கழிவுகளைத் திறந்து விடுவதால் தண்ணீர் மாசு அடைந் துள்ளது.
இது தொடர்பாக கடந்த 28.10.2018ம் தேதி அணையின் வலது கரை நீர்ப்பரப்பில் சேலம் மாசுக் கட்டுப்பாடு
வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நீர் மாதிரி எடுத்துச் சென்றனர்.
ஆனால் இதுவரை ஆய்வின் முடிவுகள் குறித்து எதுவும் தெரிவிக் காமல் இருப்பது பொது மக்களை மேலும் பதற்றமடைய செய்கிறது'' என்றார்.
இது குறித்து மேட்டூர் அணையின் செயற் பொறியாளர் மது சுந்தரம், ''இரண்டு வாரத்திற்கு
முன்பு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நீர் மாதிரி எடுத்துச் சென்றிருக் கிறார்கள்.
இன்னும் ஓரிரு நாள்களில் ஆய்வு முடிவு அறிவிப்பார்கள்.
ஆற்றில் தண்ணீர் வராத போதும், அணையின் நீர்மட்டம் குறையும் போதும் ஆற்றுக் குள்ளும், கரையிலும் விவசாயம் செய்து வருகிறார்கள்.
அப்போது உரங்கள் பயன் படுத்தியதால் கூட இப்படி மாறி இருக்கலாம்.
2015 -ம் ஆண்டும் தண்ணீர் இதேப் போன்று மாறி துர்நாற்றம் வீசியது.
கர்நாடகா வில் இருந்து கழிவுகள் வந்திருந்தால் ஒகேனக்கல், பிலிக்குண்டு பகுதியில் தெரிந் திருக்கும்'' என்றார்.
Thanks for Your Comments