கடல் நீர்மட்டம் அதிகரிக்கக் காரணம் இயற்கையா? - எச்சரிக்கை !

0
கடந்த 25 ஆண்டுகளாக உலகில் கடல் நீர்மட்டம் தாறுமாறாக அதிகரித்து வருவதற்குக் காரணம் இயற்கையல்ல மனிதச் செயல் பாடுகளினால் மாற்ற மடைந்த பருவ நிலைகளே என்று புதிய ஆய்வு ஒன்று நெற்றியில் அடிக்குமாறு ஆதாரப் பூர்வமாகத் தெரிவி த்துள்ளது.
நேஷனல் அகாதெமி ஆஃப் சயன்ஸஸ் என்ற இதழில் இந்த ஆய்வின் கண்டு பிடிப்புகள் வெளியாகி யுள்ளன. 

புவி வெப்பமடை தலுக்குக் காரணமான மனித உற்பத்தி, மற்றும் பல சீரழிவு நடவடிக்கை களினால் கடல் நீர்மட்டம் சராசரியாக உயரும் விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக உயர்ந்து வருகிறது, 

இந்த நிலை தொடரவே செய்யும் என்று எச்சரித்துள்ளது. அமெரிக்கா வில் உள்ல சுற்றுச்சூழல் மற்றும் வளிமண்டல் ஆய்வு தேசிய மையத்தின் (NCAR) ஜான் ஃபாஸுல்லோ கூறும் போது, 
“பிராந்திய கடல் நீர் மட்ட அதிகரிப்பின் வகை மாதிரிகளில் பருவநிலை மாற்றம் பெரிய தாக்கம் ஏற்படுத்து கிறது என்று தெரியும் 
அதே சமயத்தில் இது எதிர்கால பருவநிலை மாற்றத்தையும் பெரிய அளவில் தூண்டிவிடும் என்றே கூற முடியும். இந்த நூற்றாண்டின் சராசரியைக் காட்டிலும் கடல் நீர்மட்டம் மேலும் 2 -3 அடி கூடுத லாக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. 

ஆனால் பிராந்திய வாரியாக இதில் ஏற்படும் மாற்றங்கள் கடற்கரை பகுதி மக்களுக்கு  மிக முக்கியமனது, அவர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கிறார்.

கடந்த காலத்தில் முன்னறிவிப் பாளர்கள் உலக அளவில் கடல் நீர்மட்ட அதிகரிப்பு விகிதத்தை நம்பியிருக்க வேண்டி யிருந்தது .அதனால் ஆண்டுக்கு 3 மிமீ வரை கடல் நீர்மட்டம் உயரும் மேலும் உயரும் என்று கூறி வந்தனர், 
ஆனால் இப்போடு சாட்டிலைட் பயன் பாட்டினால் அதன் பிராந்திய கடல் பகுதிகளின் கூடுதல் தாக்கமும் தெரிய வந்துள்ளது.

புதிய உத்திகள், உயர் தொழில் நுட்பம் மூலம் மேற்கொள்ளப் படும் கணிப்பில் 1993ம் ஆண்டு முதல் கடல் நீரமட்ட உயர்வை ஆய்வு செய்கின்றனர், 

இடில் கடல் மேற்பரப்பு உயரங்கள் பற்றிய ஆய்வும், கணக்கீடும் அடங்கும். அதாவது உலக அளவில் சராசரி கடல் நீர்மட்ட அதிகரிப்பு மற்றும் சில பிராந்திய கடல் நீர்மட்ட அதிகரிப்பு 
அந்த சராசரியி லிருந்து எப்படி மாறுபட்டு உயருகிறது என்பதையும் இந்த ஆய்வு சுத்தமாக வரைபட மாதிரி யாக்கி யுள்ளது.

உதாரண மாக அண்டார்டிகா மற்றும் அமெரிக்க மேற்குக் கடற்கரைப் பகுதிகளைச் சுற்றியுள்ள கடல் நீர்மட்டம் ஆண்டு சராசரியக் காட்டிலும் குறைவாக உயர்ந்தால், 

அமெரிக்க கிழக்கு கடல் மற்றும் தெற்காசியா வில் சராசரியைக் காட்டிலும் அதிகம் கடல் நீர்மட்டம் உயர்வதைக் காண முடிகிறது.
இந்த ஆய்வின் படி சில பிராந்தியங் களில் உள்ளூர் கடல் நீர்மட்ட அதிகரிப்பு உலக சராசரியைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

சராசரியைக் காட்டிலும் அதிகமாகும் கடல் நீர்மட்டம் என்பது மனித காரணங்களி னால் ஏற்படும்  பருவநிலை மாற்றங்க ளினாலேயே என்றும் இயற்கை யாக மாறும் கடல்சார் சூழல்களி னால் அல்ல என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் வானிலை மாற்றத்தி னால் ஏற்படும் பிராந்திய கடல் நீர்மட்ட உயர்வு சில சமயங்களில்  இயற்கை சுழற்சியினால் ஏற்படும் தாக்கங்களைப் போல் செய்தல் போன்று இருக்கும் 

எனவே இது இயற்கை மாற்றம் என்று தவறாக கணிக்கக் கூடாது என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings